தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2022 - சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 2 February 2022

தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2022 - சிட்னி

 தாயக மக்களின் உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், மார்ச் 2021 முதல் தமிழ்ஒளி உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை சிட்னியில் ஆரம்பித்திருந்தோம்.

இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, மாதாந்த உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.


தமிழ்ஒளி 2022 திட்டம் பற்றிய விபரங்கள்

========================================தமிழ்ஒளி - டிசம்பர் 2022


வாழ்வாதார திட்ட உதவியாக வாகன திருத்தகம் மற்றும் வாகன சுத்திகரிப்பிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ரூபா மூன்று இலட்சம் வழங்கப்பட்டது. 


இவரது சகோதரர்கள் 2ம் லெப்டினன்ட் சிவா (எட்வேட் யோசப், வீரச்சாவு 10-10-1988) மாவீரர் எட்வேட் ரைபன் (வீரச்சாவு 2008) ஆவர்.
இத்தோடு சிறிய உதவித்திட்டமாக வீரவேங்கை கபில் (சுப்பிரமணியம் முருகேந்திரன், வீரச்சாவு 17-07-1990) அவர்களின் தந்தையார் அவர்களுக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு உதவியாக கோரப்பட்ட 20000 ரூபா உதவி வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக என்ன வகையில் அவருக்கு உதவி செய்யப்படலாம் என்பதும் பற்றி பின்னர் ஆராய்ந்து உதவி செய்யப்பட உள்ளது.


தமிழ்ஒளி - நவம்பர் 2022


திருகோணமலை இலுப்பைக்குளம் சாம்பல்தீவில் வசிக்கும் இரண்டு மாவீரர்களின் தாயாரின் வாழ்வாதார உதவியாக இரண்டு இலட்சம் ரூபா நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது. உடனடித் தேவைக்காக 10000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.


கப்டன் திருச்செல்வம் (வீரச்சாவு 11-04-1994) வீரவேங்கை திருச்செல்வி (வீரச்சாவு 24-06-1997) ஆகியோரின் தாயார் அவரது கணவரையும் போர்க்காலத்தில் 1987 இல் இழந்திருந்தார். 


திட்டச் செலவு 210000.00 ரூபா


இத்திட்டத்திற்காக பங்களித்த சிட்னி தமிழ்ஒளி பங்காளர்களுக்கு நன்றி.தமிழ்ஒளி - ஒக்ரோபர் 2022


தாயக விடுதலைக்கான பணியில் இரண்டு மாவீரர்களை பெற்றெடுத்த குடும்பம் (கப்டன் சிலம்பரசன் [பாடகர் குட்டிக்கண்ணன்] வீரச்சாவு 2008, கப்டன் பசுமையன் வீரச்சாவு 2008) ஒன்றின் வாழ்வாதார உதவித்திட்டமாக ஆறு ஆடுகள் வாங்கி கொடுக்கப்பட்டு அதற்கான கொட்டிலும் போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.


திட்டச் செலவு 295610.00 ரூபா


இத்திட்டத்திற்காக பங்களித்த சிட்னி தமிழ் ஒளி பங்காளர்களுக்கு நன்றி.


தமிழ்ஒளி - செப்ரம்பர் 2022


தாயக விடுதலைக்கான பணியில் இரண்டு மாவீரர்களை பெற்றெடுத்த குடும்பம் ஒன்றின் வாழ்வாதார உதவித்திட்டமாக கோழிக்கூடு அமைத்து கொடுக்கப்பட்டதுடன் 75 நாட்டு கோழிகளும் வாங்கி கொடுக்கப்பட்டது.


திட்டச் செலவு 250040.00 ரூபா


இத்திட்டத்திற்காக பங்களித்த சிட்னி தமிழ் ஒளி பங்காளர்களுக்கு நன்றி.


தமிழ்ஒளி - ஓகஸ்ட் 2022


தாயக விடுதலைக்காக தனது இரண்டு சகோதரர்களை மாவீரர்களாக இழந்து, வவுனியா தரணிக்குளத்தில் வாழ்ந்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கான வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு அமைத்து கோழிகள் வாங்கி கொடுக்கப்பட்டதுடன் விவசாயம் செய்வதற்கான வேலியும் அடைத்து கொடுக்கப்பட்டுள்ளது.


திட்டச் செலவு 230000.00 ரூபா


இத்திட்டத்திற்காக பங்களித்த சிட்னி தமிழ் ஒளி பங்காளர்களுக்கு நன்றி.தமிழ்ஒளி - ஜூலை 2022


தாயக விடுதலைக்காக தனது மூன்று புதல்வர்களை மாவீரர்களாக வித்தாக்கி முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் தனிமையில் வாழ்ந்துவரும் தாய் ஒருவருக்கு, வங்கிக்கணக்கு திறந்து ரூபா இரண்டு இலட்சம் நிரந்தர வைப்பு செய்யப்பட்டது. அதில் வரும் நிரந்தர வட்டி அவரது வாழ்வாதாரத்திற்கு உதவும்.


இத்திட்டத்திற்காக பங்களித்த சிட்னி தமிழ் ஒளி பங்காளர்களுக்கு நன்றி.


தமிழ்ஒளி - ஜூன் 2022

திருகோணமலை மல்லிகைத்தீவைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களைக் கொண்ட வயதான தாய் தந்தையின் நாளாந்த தேவைக்கான உதவியை வங்கி வட்டி மூலம் பெற்றுக்கொள்ளும் முகமாக இரண்டு இலட்சம் ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தில் பங்களித்துவரும் சிட்னி தமிழ்ஒளி பங்காளிகளுக்கு நன்றிகள்.தமிழ்ஒளி - மே 2022

வன்னிப் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வாதார உதவியாக ரூபா 220000 செலவில் இரண்டு பசு மாடுகளும் ஒரு கன்றும் வாங்கிகொடுக்கப்பட்டு அவற்றை பராமரிப்பதற்கான கொட்டகைக்கான 12 தகரங்களும் வழங்கப்பட்டன.


இத்திட்டத்தில் பங்களித்துவரும் சிட்னி தமிழ்ஒளி பங்காளிகளுக்கு நன்றிகள்.

தமிழ்ஒளி - ஏப்ரல் 2022

திருகோணமலை பன்குளம் பகுதியில் வசிக்கும் இரண்டு மாவீரர்களின் பெற்றோருக்கு ரூபா இரண்டு இலட்சம் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ஒளி - மார்ச் 2022

திருகோணமலையை சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையாரான சித்திரவேல் என்பவர், தனது மகளின் பராமரிப்பில்தான் வாழ்ந்துவருகின்றார். அவரது வாழ்வாதாரத்திற்கு உதவியாக 1.5 இலட்சம் ரூபா செலவில் ஒரு பசுவும் கன்றும் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.


மாவீரர்களின் விபரம் வருமாறு:

1. லெப். கேணல் மணியரசன் (சித்திரவேல் முரளிதரன் 14-12-1967 - 21-01-2009)

2. சித்திரவேல் சசிகரன் (மேலதிக விபரம் இணைக்கவேண்டும்)


இந்த உதவித்திட்டம், சிட்னி தமிழ் உறவுகளின் தமிழ்ஒளித்திட்ட பங்காளர்களின் உதவியுடன் மார்ச் 2022 திட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்ஒளி - பெப்ரவரி 2022


சந்திரகுமார் விஜயராணி என்பவருக்கு கோழிகளும் தையல் இயந்திரமும் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை வைத்து வாழ்வாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான உதவித் திட்டமாக அவரது காணிக்கு 130,000 ரூபாய் செலவில் வேலி அடைத்து கொடுக்கப்பட்டது.


இவரது கணவர் 10-06-1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது மூத்தமகன் 2000 ஆம் ஆண்டு பளையில் யுத்தத்தின்போது மரணமடைந்துள்ளார்.

இவரது மகள் சந்திரகுமார் தர்சினி (இயக்கப்பெயர் இமையாள்) 06-12-2006 அன்று மன்னாரில் வீரச்சாவடைந்துள்ளார்.

இவரது கடைசி மகளின் கணவர் இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவரும் இவரது கடைசி மகளும் பேர்த்தியும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள்.

பின்னர்


   முன்னர்
தமிழ்ஒளி - ஜனவரி 2022


வன்னியில் நான்கு மாவீரர்களை தேசவிடுதலைக்கான பணியில் இழந்த வயோதிப தாய் தந்தையருக்கு 130000 ரூபா செலவில் சில மாதங்களில் ஒரு கன்று ஈனக்கூடிய மாடு ஒன்று வாங்கிகொடுக்கப்பட்டு அதற்கான கொட்டில் போடுவதற்கு 23000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. மாட்டு வைத்தியரை கொண்டு உரிய பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே இந்த மாடு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்ஒளி திட்டத்தின் ஊடாக 2021 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உதவிகள் 

No comments:

Post a Comment

Post Bottom Ad