தாயக மக்களின் உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், மார்ச் 2021 முதல் தமிழ்ஒளி உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை சிட்னியில் ஆரம்பித்திருந்தோம்.
இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, மாதாந்த உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
தமிழ்ஒளி 2023 திட்டம் பற்றிய விபரங்கள்
========================================
ஜூலை 2023 - தமிழ்ஒளி - உதவித்திட்டம்
திருமலை - மூதூர் கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த முன்னாள் போராளி குடும்பத்தைச் சேர்ந்த இவர், முள்ளந்தண்டில் காயமடைந்து 1.5 வருடகாலம் சிகிச்சை பெற்றவர். காயத்தினால் ஒரு கால் சிறிது கட்டை. இவருக்கு இரண்டு பிள்ளைகள். கணவரும் பிரிந்து சென்றுவிட்டார்.
இவரது தந்தை நாட்டுப்பற்றாளர். இரண்டு சகோதரர்கள் மாவீரர் (லெப். வாணன் - வர்ணகுலசிங்கம் அன்பழகன் - வீரச்சாவு 1998, கப்டன் வாணன் - வர்ணகுலசிங்கம் காளீஸ்வரன் - வீரச்சாவு 2009). இவர் இவரது தாயையும் பராமரித்து வருகிறார்.
ஆறு மாதத்தில் கன்று ஈனக்ககூடிய 7 லீற்றர் பால் கறக்க கூடிய பசுமாடு ரூ 185000 செலவில் வாங்கிக்கொடுக்கப்பட்டு, ரூ15000 நிதியாகவும் என ரூபா இரண்டு இலட்சம் வழங்கப்பட்டது.
இவ்வுதவியை பாடசாலை அதிபர் வழங்கி வைத்ததுடன், உதவித் திட்டத்திற்கான மேற்பார்வையையும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
========================================
தமிழ்ஒளி - ஜூன் 2023
வன்னி ஓமந்தையைச் சேர்ந்த முன்னாள் போராளி எரிமலை வாழ்வாதார உதவி திட்டமாக தூவல் பாசனத்திற்கு தேவையான உதவி கேட்டிருந்தார்.அதற்கான உதவி வழங்கப்பட்டு தூவல் பாசனத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.
இவர் இறுதிப்போர்க்காலத்தில் சண்டையில் ஈடுபட்டு ஒரு காலை இழந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.
திட்டச் செலவு - 2 இலட்சம் ரூபா
இத்திட்டத்தை நிறைவு செய்ய ஒத்துழைத்த அனைத்து பங்காளர்களுக்கும் எமது நன்றிகள்.
=====================================================
தமிழ்ஒளி - மே 2023
வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளை கொண்ட முன்னாள் போராளி குடும்பம் ஒன்றுக்கான உதவிக் கோரிக்கை கிடைக்கப்பெற்றதை அடுத்து அவருக்கு கடைக்கான உதவியாக 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
=====================================================
தமிழ்ஒளி - ஏப்ரல் 2023
மன்னார் மாவட்டம் தேவன்பிட்டியைச் சேர்ந்த முன்னாள் போராளிக்கான வாழ்வாதாரமாக அவரது கடையை மேம்படுத்த உதவி கோரப்பட்டிருந்தது.
அவருக்கு ஒரு கால் இல்லை. மற்ற காலிலும் அதிக காயங்கள். மூன்று பிள்ளைகள் அனைவரும் 2009 இற்கு பின்னர் பிறந்தவர்கள்.
நேரடியாக சென்றும் குடும்ப நிலை சரி பார்க்கப்பட்டு ரூபா இரண்டு இலட்சம் நேரடியாக அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு அவர் கடைக்கான பிறின்ரரும் வாங்கி பொருட்களும் வாங்கியுள்ளார்.
========================================
தமிழ்ஒளி - மார்ச் 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பம் ஒன்றின் வாழ்வாதார தேவைக்கான உதவியாக கடை மேம்படுத்தலுக்கான உதவி செய்யப்பட்டது.
திட்டச் செலவு = இரண்டு இலட்சம் ரூபா
========================================
தமிழ்ஒளி - பெப்ரவரி 2023
வவனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளி குடும்பத்திற்கு கடை வைப்பதற்கான உதவி செய்யப்பட்டது. அந்த கிராமத்தில் வாழ்பவர்களுக்கு அந்த கடை மிகவும் அவசியமானதாகும்.
திட்டச் செலவு = இரண்டு இலட்சம் ரூபா
========================================
தமிழ்ஒளி - ஜனவரி 2023
வவுனியா வடக்கு ஒலுமடு நெடுங்கேணியைச் சேர்ந்த மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் புவனேஸ்வரி (சுப்பிரமணியம் மதியழகன் - 2ம் லெப்ரினன்ற் மதியழகன் வீரச்சாவு 18 - 07 - 1996) என்பவருக்கு வாழ்வாதார உதவியாக விவசாயம் செய்வதற்காக குழாய்கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டது.
இவ் உதவித்திட்டம் சிட்னியைச் சேர்ந்த 30 உறவுகளின் பங்களிப்பில் செய்யப்பட்டது.
========================
தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2022 - சிட்னி
தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2021 - சிட்னி
No comments:
Post a Comment