எழுகை தாயக உதவித்திட்டம் - மெல்பேர்ண் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 17 January 2023

எழுகை தாயக உதவித்திட்டம் - மெல்பேர்ண்

தாயக மக்களின் உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், ஓகஸ்ட் 2022 முதல் எழுகை உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை மெல்பேணில் ஆரம்பித்திருந்தோம்.

இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, தொடர்ச்சியாக உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.


எழுகை உதவித் திட்டம் பற்றிய விபரங்கள்

========================================

எழுகை உதவித்திட்டம் 07
முல்லைத்தீவுமாவட்டம்_ தேவிபுரம் "அ" குடியிருப்பை வதிவிடமாகக்கொண்ட திருமதி திருநேசன் சிவமலர் (சுமித்திரா) என்பவர் உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகத்தின் அங்கத்தவராவார். இவர் திருமணமாகி இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். இருவரும் பதினெட்டு வயதிற்குட்பட்ட பள்ளிமாணவர்களாவர். இவரது கணவரான திருநேசன் (தேசிகன்) வன்னியில் இறுதியுத்தம் முடிவுற்றதருணத்தில் முள்ளிவாய்க்காலில் காணாமல்ப்போயுள்ளார்.
எனவே இவர் தனது வறுமைநிலையினை விளக்கி தனக்கு வாழ்வாதார உதவியாக கால்நடை வளர்ப்பிற்கு உதவிசெய்யுமாறு கேட்டு எழுகைக்குழுமத்திடம் தனது வேண்டுகோள் விண்ணப்பம் அத்துடன் ஆட்டுக்கொட்டில் அமைப்பதற்கான உத்தேசமதிப்பீடு மற்றும் ஆடுகள் கொள்முதல் செய்வதற்கான உத்தேசமததிப்பீடு ஆகியவற்றை சமர்ப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தையும் உத்தேசமதிப்பீடுகளையும் எழுகை உபகுழு சாதகமாகப்பரிசீலித்து உதவிசெய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருந்தது.
குறித்த இந்த உதவித்திட்டத்திற்கு இரண்டுலட்சத்து இரண்டாயிரம்ரூபா நிதி மதிப்பிடப்பட்டு குறித்ததொகைநிதி கடந்த16_05_2023 அன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதாவது ஒருலட்சத்து இரண்டாயிரம்ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆட்டுக்கொட்டில் அமைக்கப்பட்டதோடு ஒருலட்சம்ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1 கிடாய் ஆடும் 3 மறி ஆடுகளுமாக 4 ஆடுகள் பட்டி உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டன. மொத்தமாக இரண்டுலட்சத்து இரண்டாயிரம்ரூபா நிதி இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. குறித்த இந்த செயற்திட்டம் 25_05_2023 அன்று நிறைவுற்றது.
குறிப்பு: உறவுச்தோலை மறுவாழ்வுக்கழகம் என்பது பெற்றோரை இழந்த பிள்ளைகளை இணைத்து அவர்களுக்கான வாழ்வியலை மேம்படுத்துவதற்காக தாயகத்தில் சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.




=============================================

எழுகை உதவித்திட்டம் 06
திருமதி தர்மலிங்கம் சின்னம்மா வயது: 68.தொட்டியடி_ விசுவமடு முல்லைத்தீவு. தாயகவிடுதலைக்காக இரண்டு பிள்ளைகளை அர்ப்பணித்தவர்.
மேற்குறித்த பயனாளி கோழிவளர்ப்புத்திட்டத்திற்கு உதவி கோரியதற்கு அமைவாக எழுகை உதவித்திட்ட குழுமத்தினரால் 2.49000.00/= (இரண்டுலட்சத்து நாற்பத்தொன்பதாயிரம்ரூபா) நிதி ஒதுக்கீட்டில் கோழிவளர்ப்புத்திட்டம் செயன்முறைப்படுத்தப்பட்டு நிறைவுபெற்றுள்ளது.
கோழிகள் வளர்ப்பதற்கான கொட்டில் அமைத்து முப்பது கோழிகள் கொள்முதல்செய்து அதற்கான முதற்கட்டத்தீவனம் மற்றும் தீவனம் வைப்பதற்கான பாத்திரம் என்பன கொள்முதல் செய்யப்பட்டு குறித்த பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.




========================================

எழுகை உதவித்திட்டம் - 05


அம்பாறைமாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை வதிவிடமாகக்கொண்ட திருமதி கந்தசாமி யோகேஸ்வரி என்பவரது கணவர் 2008_ம் ஆண்டு போராட்டகாலத்தில் தன்னுயிரை அர்ப்பணித்தவர்.  (யோகேஸ்வரியின் இரண்டு சகோதரர்களும் தமது உயிர்களை போர்க்காலங்களில் ஈகம்செய்தவர்கள்) அத்துடன் இவரது மகன் சிலமாதங்களுக்குமுன்னர் விபத்தொன்றில் சாவடைந்துவிட்டார். இந்நிலையில் திருமதி கந்தசாமி யோகேஸ்வரி என்பவர் மூன்று பிள்ளைகளுடனும் வயதுமுதிர்ந்த தந்தையாருடனும் மிகவும் வறுமைநிலையில் வாழ்ந்துவருகின்றார். 

இவர் தனது குடும்பவாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எழுகை குழுமத்திடம் கோழிவளர்ப்பிற்கு உதவிகேட்டிருந்தார். அதாவது கோழிக்கூடு அமைத்து கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கான மருந்து, தீவனம் என்பவை வாங்குவதற்காக இரண்டுலட்சம்ரூபா பணம் (200.000/=) மதிப்பிடப்பட்டு உதவி கேட்டிருந்தார்.

இதற்கமைவாக இவரது தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு எழுகை நிர்வாகமும் பரிசீலித்து ஒப்புதல்கள் வழங்கியிருந்தார்கள். எனவே இதனைத்தொடர்ந்து 24_01_2023 பயனாளி திருமதி கந்தசாமி யோகேஸ்வரி என்பவருக்கான கோழிவளர்ப்பிற்கான உதவித்தொகை இரண்டுலட்சம்ரூபா (200.000/=) பணம் வழங்கிவைக்கப்பட்டது.



========================================

எழுகை உதவித்திட்டம் - 04


கிளிநொச்சிமாவட்டம் பிரமந்தனாறு_ கல்லாறு கிராமத்தில் வசிக்கும் திருமதி வத்சலா குடும்பம் வீட்டுத்தோட்டம் செய்வதற்காக தண்ணீர்ப்பைப்லைன் செய்து தண்ணீர்மோட்டர் பொருத்தி செயலற்றிருந்த மின் இணைப்பு வயறிங் வேலைகளையும் சீர்செய்து தருமாறும் ஏற்கனவே செலுத்தப்படாமல் நிலுவையிலிருந்த மின் கட்டணத்தையும் செலுத்தி மின் இணைப்பையும் பெற்றுத்தருமாறும் எழுகை குழுமத்திடம் உதவி கேட்டிருந்தார்கள்.


அதற்கமைவாக இவரது கோரிக்கை எழுகை உதவித்திட்டக்குழு சாதகமாக பரிசீலித்து எமது திட்டத்தின் நான்காவது கட்டமாக இவ் உதவித்திட்டத்தை நிறைவேற்றியிருந்தது.

மேற்குறிப்பிட்ட திட்டம் ஒருலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து அறுநூற்றி அறுபத்தைந்துரூபா செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேலைத்திட்டதத்தின் பற்றுச்சீட்டும் நிழற்படங்களும் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது.






=========================================================================

எழுகை உதவித்திட்டம் - 03


திரு மரியதாஸ் கிறேசியன்.

செல்வாநகர்.

கிளிநொச்சி.

மேற்குறித்த பயனாளியான குடும்பஸ்தர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் மேற்படி முகவரியில் வசித்துவருகின்றார். இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் பாடசாலை மாணவர்கள். (சிறுவர்கள்) இவர் கடந்த 2016_ம் ஆண்டு வீதிவிபத்திற்கு உள்ளாகியதில் காலில் கடுமையாக காயமுற்று கால் எலும்பு தொற்றுக்குள்ளானதில் காயமடைந்த காலப்பகுதி துண்டிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

இதன்பிற்பாடு இவர் தனது குடும்பவாழ்வாதாரத்திற்காக சிறிய கடனுதவிகளைப்பெற்று   செல்வாநகர்_ கிளிநொச்சிப்பகுதியில் சிறியளவிலானதும் மட்டுப்படுத்தப்பட்டளவிலானதுமான அழகுசாதனப்பொருட்கள் கடை (Fancy Shop) நடாத்திவருகின்றார். இவர் தனது Fancy Shop இற்கு மேலதிகமான பொருட்களை கொள்வனவுசெய்து கடையை விருத்தி செய்வதற்காக எழுகை உதவித்திட்டக்குழுவினரிடம் இரண்டுலட்சம்ரூபா  நிதியுதவி  கேட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இவரது நிலைமைகளை நேரில்ச்சென்று ஆராய்வதற்காக மக்கள் நலன்காப்பக நடுவப்பணியகத்தில் கடமையாற்றும் திரு தங்கவேலு பாலசுரேஸ் என்பவர் இவரது கடைக்குச்சென்று இவரை சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்து எமக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து இவ் உதவித்திட்டம் எழுகைத்திட்ட நிர்வாக உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்பட்டது. 

அடுத்தகட்டமாக இவருக்கான உதவித்தொகை  இரண்டுலட்சம்ரூபா பணம் 20_12_2022 அன்று இவரது வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த நிதியை அவர் வங்கியிலிருந்து பெற்று  அதனை மூலதனமாகக்கொண்டு  22_12_2022 இல் தனது Fancy Shop இற்கான பொருட்களை கொள்முதல் செய்துள்ளார். பொருட்களின் படங்களையும் எமக்கு அனுப்பிவைத்துள்ளார். அவற்றையும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது









====================================================================


உதவித்திட்டம் - 02


தம்பிலுவில், திருகோணமைலையை வதிவிடமாகக்கொண்ட திரு கிருஷ்ணபிள்ளை சிவகணேசமூர்த்தி என்பவர் போர்க்காலங்களில் சில சந்தர்ப்பங்களில் விழுப்புண்களை ஏற்றிருந்தவர். அதன் தாக்கங்கள் இவரது உடல் இயல்புநிலையை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இவரது குடும்பம் மிகவும் வறுமையான நிலையிலும் பொருளாதார நெருக்கடியிலும்  வாழ்ந்துவருகின்றார்கள். எனவே இவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இவரது  வேண்டுகோளுக்கிணங்க இவருக்கு பரிச்சயமான தொழிலான கடற்தொழில் செய்வதற்கு மீன்பிடித்தலுக்கு பயன்படுத்தப்படும் தோணி மற்றும் வலைகள் அதற்குத்தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இவருக்கு எழுகை உதவித்திட்டக்குழுமததினரால்  28_10_2022 அன்று 2.00000 (இரண்டு இலட்சம்ரூபா) பணம் வழங்கப்பட்டது.





======================================================================

உதவித்திட்டம் - 01


இத்திட்டத்தில் முதலாவது பயனாளியாக 2003ம் ஆண்டு தன்னுயிரை ஈகம் செய்த   மணியரசனின் தந்தையாருக்கு  (நெடுங்கேணி முல்லைத்தீவு) பழக்கடை அமைத்துக் கொடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு 2.50000/=  (இரண்டுலட்சத்து ஐம்பதாயிரம்ரூபா) மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு இத்தொகையை இரண்டு கட்டங்களாக அனுப்புவதாக முடிவுசெய்யப்பட்டது.  அதற்கமைவாக முதற்கட்டமாக செப்ரெம்பர் மாதம் 1.50000/= (ஒருலட்சத்து ஐம்பதாயிரம்ரூபா)  அனுப்பி வைக்கப்பட்டது.  அவர் அந்த உதவித்தொகையைக் கொண்டு கடையை மேம்படுத்தி கண்ணாடி அலுமாரியும் வாங்கியுள்ளார். அடுத்து அடுத்த கட்டமான வேலைகள் மற்றும் பழங்கள் முதலீட்டுக்கான அவருக்கான இரண்டாம்கட்ட நிதியான மிகுதி 1.00000 /= (ஒரு லட்சம் ரூபா) பணமும் 04 - 11 - 2022 அன்று அனுப்பிவைக்கப்பட்டது.



=======================================================================





No comments:

Post a Comment

Post Bottom Ad