நியு சவுத்வேல்ஸ் தமிழ் மக்கள் சார்பாக, அனைத்து தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு தைப்பொங்கல் திருவிழா நிகழ்வு 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மதியம் 2 மணி வரை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் பின்னணி கொண்ட தமிழர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், நியு சவுத்வேல்ஸ்மாநில அவை உறுப்பினர்கள் மறறும் ஏனைய சமூகங்களை சேர்ந்த நண்பர்களும் பங்குகொண்டிருந்தனர். பத்துப்பானைகளில் ஒவ்வொரு பானைக்கும் தலா மூன்று குடும்பத்தினர் என இணைந்து பொங்கல் பொங்கும் நிகழ்வு நடைபெற்றிருந்தது.
கலைநிகழ்வுகளாக, சிறார்களின் நடன நிகழ்வு, பாடல், பாரம்பரிய ஆடல் என்பனவும் கோலப்போட்டியும் உறி அடித்தல் போட்டியும் கரப்பந்தாட்ட போட்டியும் சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல் மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்குதல் விளையாட்டுகளும் நடைபெற்றிருந்தன.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டு உயர்தர பாடசாலை தேர்வில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். அத்தோடு, தமிழர் பாரம்பரிய உடைகளோடு கலந்துகொண்ட ஒரு குடும்பத்திற்கான சிறப்பு பரிசிலும், சிறந்த பொங்கல் பானைக்கான சிறப்பு பரிசில் மூன்று குடும்பத்திற்கும், பொங்கல் நிகழ்விற்கு தாங்களாகவே சிற்றுண்டிகளை தயாரித்துக்கொண்டு வந்திருந்தவர்களில் சிறப்பு சிற்றுண்டிகளுக்கான மூன்று பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், விலங்குபண்ணை (animal farm), துள்ளல் மேடை(jumping castle) என்பனவும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வருகை தந்த அனைவருக்கும் பொங்கல் சாதம், சிற்றுண்டிகள், பானகம், குளிர்பானம், கறி அமுதம் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment