இரண்டாவது வாழ்வாதார உதவியாக முல்லைத்தீவைச் சேர்ந்த தீபன் குடும்பத்திற்கு 160000 ரூபாய்க்கு பசுவும் கன்றும் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது உதவியாக கனகராஜன்குளத்தைச் சேர்ந்த வீரவேங்கை திருவருள் அவர்களின் தாயார் சரஸ்வதி என்பவருக்கு 85000 ரூபாய் செலவில் பசு ஒன்று வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. (வாழ்வாதார உதவி என்பதால் விற்றவர் அதன் நியாயமான விலையை விட குறைவாக அதனை விற்றிருந்தார்) அதற்கான கொட்டில் செய்வதற்கு 65000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. (கொட்டில் போடப்பட்டு, கீழே மண் போட்டு சீமெந்து போடப்படவுள்ளது).
மிகுதி 35000 ரூபாவும் இன்னொரு தேசத்திற்காக உழைத்த குடும்பத்தின் வாழ்வாதார உதவிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment