கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு 16-01-2023 அன்று திங்கட்கிழமை பிரிஷ்பனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை குணா அவர்கள் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை சிவா அவர்கள்
ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை பகலவன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தியாநந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை காயத்திரி காந்திதாசன் அவர்கள் ஏற்றிவைத்து, மலர் மாலையை அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அனைவரும் மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, மாவீரர்களை பற்றிய கவிதையும் நினைவுரையும் இடம்பெற்றதை தொடர்ந்து, தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.
No comments:
Post a Comment