அவுஸ்திரேலிய பெருநகரங்களில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 9 March 2021

அவுஸ்திரேலிய பெருநகரங்களில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்


அன்பான உறவுகளே,


தமிழீழ தாயக உறவுகளின் நீதிக்கான கோரிக்கைக்கு தீர்வுதேடும் பயணத்தில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தில், தமிழர் இனவழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு (ICC) பாரப்படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.


அத்தோடு தமிழர் இனவழிப்பு தொடர்பாக சர்வதேச நீதிக்கான பொறிமுறை (IIIM) ஒன்றை ஏற்படுத்துமாறும் அதன் மூலம் சாட்சிகளையும் ஆவணங்களையும் பதிவுசெய்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு கோருவதுடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் விசேட தூதுவரை நியமித்து இலங்கைத்தீவில் தொடரும் அடக்குமுறைகளை கண்காணிக்குமாறும் தாயகமக்கள் கோரிநிற்கின்றார்கள். சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் உரிமையை நிலைநிறுத்த உதவுமாறும் தாயகமக்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.


இவற்றை வலியுறுத்தி, எமது மக்கள் தாயகத்தில் சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பல கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, பிரித்தானியாவில் திருமதி அம்பிகை அவர்களும் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.


ஆனால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபானது, தமிழ் மக்களின் நீதிக்கான தீர்வுகளை தவிர்த்து மீளவும் சிறிலங்கா அரசுக்கு காலஅவகாசம் வழங்குகின்ற தீர்மானம் ஒன்றையே முன்வைக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.


எனவே, தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களில் எதிர்வரும் சனிக்கிழமை 13-03-2021 அன்று பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த வகையில் பின்வரும் இடங்களில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


• Parramatta Town Hall, Parramatta, Sydney, from11am-1pm : 0401 842 780, 0402 169 364, 0424 757 814


• State Library Victoria, Melbourne, from 2pm – 3.30pm : 0433 002 619, 0406 429 107, 0437 332 240


• Forrest Chase, Forrest Place, Perth 3pm-6pm : 0469 823 269, 0470 169 692, 0421 514 004


• Victoria Square (North), Adelaide 10am : 0469 059 281, 0470 334 004, 0469 067 679


• King George Square, Brisbane 10.30am : 0415 159 283, 0410 296 811, 0420 638 750








தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா மற்றும் தமிழ்த்தேசிய செயற்பாட்டு அமைப்புகள்

No comments:

Post a Comment

Post Bottom Ad