ஐக்கியநாடுகள் மனிதவுரிமைபேரவை ஊடாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில் தமிழ் மக்களிற்கான நீதி தொடர்பான விடயத்தில் தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் தாயக மற்றும் புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றுசனிக்கிழமை 13-05-2021 அன்று அவுஸ்திரேலியாவின் ஐந்துபெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
இன்று குயின்ஸ்லாந்து மாநிலம் பிரதான நகரான KING GEORRE SQUARE BRISBANE என்ற இடத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
இதில் முக்கிய பேச்சாளர்களாக மதிப்பிற்கு உரிய திரு பாதர் பான், திருமதி றிவக்கா, திரு.கோவி.திரு மாக், மற்றும் திருமதி இலக்கனா மேலும் பல புத்திஜீவகள் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசி நிகழ்வை சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment