பசுமை மரக்கன்று கூட்டு உதவித்திட்டம் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 2 April 2021

பசுமை மரக்கன்று கூட்டு உதவித்திட்டம்

திட்டத்தின் பெயர் – Fresh Green Garden (மரக்கன்று உற்பத்தி விற்பனை பயிற்சி நிலையம்.)


திட்டத்தின் வடிவம்


மரக்கன்றுகள் , பூக்கன்றுகள்

• உற்பத்தி

• கொள்வனவு

• விற்பனை

• பயிற்சி


இடம்

இல 127/1 புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு, கல்லடி [ BOC BANG முன்பாக]

 

பயனாளிகள் எண்ணிக்கை

நிரந்தரப் பயனாளிகள் - 03

பகுதி நேர பயனாளிகள் -15 இவர்கள் வீட்டில் இருந்தவாறு மரக்கன்றுகளை உற்பத்தி செய்து எமக்கு வழங்குவார்கள். மரக்கன்றுகளுக்கு உரிய ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.


நிதி உதவி –  சிட்னி , அவுஸ்ரேலிய வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியில் இவ் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது .


திட்டத்திற்கான ஆரம்ப நிதி - 10,600.00 பத்து இலட்சத்து அறுநூறு ஆயிரம் ரூபா.


திட்டத்தின் இலக்கு – குடிசைக் கைத்தொழிலில் வேலைவாய்ப்பு.


திட்டத்தின் நோக்கம்

I. சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தக நடவடிக்கை .

II. வாழ்வதார ஜீபநோபய வாழ்க்கைக்கு உதவுதல்.

III. ஆயுல்வேத மூலிகை உருவாக்கல்.

IV. வர்த்தக விரிவாக்கல் வியாபார நடவடிக்கை.

V. பயனாளிகளின் சந்தை வாய்ப்புக்கு உதவல்.


பயனாளிககளை சுயமுயற்சியில் சுயமாக சுய தொழிலுக்கு தயார்படுத்தல். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவல் . பயனாளிகளின் வீட்டில் இருந்து மரக்கன்றுகள்


பூக்கன்றுகள் உற்பத்தி செய்து கல்லடி Fresh Green Garden பிரதான விற்பனை நிலையம் ஊடாக விற்பனை செய்தல். தொடர்ந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் பயனாளிகள் மூலம் உப வியாபார நிலையங்கள் உருவாக்கிவருகின்றோம்.


Fresh Green Garden பிரதான நிலையத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி நிலையமும் மரக்கன்றுகள் விற்பனை பிரிவும் அதனுடன் இணைந்து பயிடற்சி நிலையமும் ஆக மூன்று உப பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.


இவ் திட்டத்திற்கு 40 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக சுய ஆர்வமுடைய 15 பயனாளிகள் இணைத்து கொள்ளப்படுவார்கள். அவர்களின் குடிசை கைத் தொழில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம்.


அவர்களிடம் இருந்து மரக்கன்றுகள் கொள்வனவு செய்யப்படும். அதன் மூலமாக பயனாளிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.










திட்ட அறிக்கை - SECDA




No comments:

Post a Comment

Post Bottom Ad