சனத்தொகை கணக்கெடுப்பு - அறிவித்தல் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 31 July 2021

சனத்தொகை கணக்கெடுப்பு - அறிவித்தல்


அன்பான உறவுகளே, 

அவுஸ்திரேலியாவில் வாழும் அனைத்து மக்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் சனத்தொகை கணக்கெடுப்பில் கலந்துகொள்ளமுடியும். 

இதனை இணையவழியாக (online) உங்கள் வீட்டுக்கு அனுப்பப்படும் பதிவிலக்கத்தை (Census number) கொண்டு அல்லது நேரடியாக இணையதளம் ஊடாக பதிவிலக்கத்தை பெற்று பூர்த்தி செய்யமுடியும். ஒரு வீட்டில் உள்ள ஒருவரே அவ்வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கும் பூர்த்தி செய்யமுடியும் என்பதால், இதனை உடனடியாக இணையவழியாக (online) பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முன்னைய சனத்தொகை கணக்கெடுப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை சரியாக பூர்த்தி செய்யப்படாததால், அதனை முழுமைப்படுத்தும் நோக்கோடு அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து தமிழர் அமைப்புகளும் இணைந்து, இச்சனத்தொகை கணக்கெடுப்பில் வீட்டில் பேசப்படும் மொழி (Does the person speak a language other than English at home?) என்பதற்கு TAMIL எனவும், எமது பூர்வீகம் (What is the persons ancestry?) என்பதற்கு TAMIL எனவும் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இச்சனத்தொகை கணக்கெடுப்பானது, ஒரு பிரதேசத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான புள்ளிவிபரமாக பயன்படுத்தப்படுகின்றது. 

தமிழர்களின் எண்ணிக்கை சரியாக குறிப்பிடப்படுவதன் மூலம், தமிழ்மொழியிலான கல்வி வசதிகளை ஏற்படுத்தல் தமிழர்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகள் போன்றவற்றுக்கு உறுதுணையாக அமையும். 

அவுஸ்திரேலியாவின் 2011 சனத்தொகை கணக்கெடுப்பின் படி 50153 தமிழர்கள் வாழ்வதாகவும், 2016 சனத்தொகை கணக்கெடுப்பின் படி 73162 தமிழர்கள் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனிலும் அதிகமாகும். 

இச்சனத்தொகை கணக்கெடுப்பில் 10-08-2021 அன்று இரவு அவுஸ்திரேலியாவில் வாழக்கூடிய எவரும் பங்குகொள்ளமுடியும். எனவே இணையவழியில் இந்த இணைப்பின் ஊடாக சென்று இதனை உடனடியாகவே பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Online Link - https://form.census.abs.gov.au/get-census-number 

இவ்வண்ணம், 
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா 
மாவீரர் நாள் செயற்பாட்டுக்குழு – தெற்கு அவுஸ்திரேலியா 
தமிழர் தேசிய கலை பண்பாட்டு பேரவை – மேற்கு அவுஸ்திரேலியா 
01-08-2021


No comments:

Post a Comment

Post Bottom Ad