பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 28 November 2021

பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு


தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. பொதுச்சுடரினை லெப்ரினன்ற் பொற்தேவன் அவர்களின் சகோதரன் திரு. டெனிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் கொடி ஏற்றப்பட்டு, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை திரு. லெபோன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்த திரு. ரவி அவர்கள் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரை லெப்ரினன்ற் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி திருமதி. பானுமதி அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உரித்துடையோரும் கல்லறைகளுக்கு முன்னே கூடிநின்று ஈகைச்சுடர்கள் ஏற்றினர்.


மாவீரர் நாள் நினைவுரையை மேஜர் செல்வம் அவர்களின் சகோதரி திருமதி. ரஞ்சினி அவர்கள் வழங்கினார். தொடர்ந்து Jonathan Sri (Councillor for The Gabba), Priya De (Socialist Alternative) ஆகியோர் உரையாற்றினர்.


தொடர்ந்து மாவீரர் வணக்க நடனத்தை செல்வி. மேனுகா பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். மாவீரர் நினைவுக்கவிதையை செல்வி டக்சிகா மோகன்ராஜ் அவர்கள் வழங்கினார். மாவீரர் நினைவு நடனத்தை செல்வி. ஜெயட் குருபரன், செல்வி. தன்சிகா சசிதரன், செல்வி. செல்வி ஜொமினா ஜெயசீலன் அவர்கள் இணைந்து வழங்கினர்.


அதனைத்தொடர்ந்து மாவீரர்கள் நினைவுப்பாடல்களுக்கான நடனங்களை செல்வி. அபி ரவிச்சந்திரன், செல்வி. சயந்தனி டிசாந்தன், செல்வி. டக்சிகா மோகன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.


நிறைவாக உறுதியேற்றலுடன் தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




































































No comments:

Post a Comment

Post Bottom Ad