தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 27/11/2022 பிற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 200 பேருக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பொதுச்சுடரை வீரவேங்கை பிதாபன் அவர்களின் தாயார் நம்பிராஜ் சாறுதா ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்த்திரேலியா தேசியக்கொடியை திரு. ஜோன் றேவன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அடுத்து அவுஸ்திரேலியா பூர்வீக மக்களின் கொடியை திருமதி. செறினா டானியல் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர்களோடு சேர்ந்து பயணித்தவரும் மற்றும் மேஜர் கமல், 2ம் லெப்ரினன்ட் பல்லவி அவர்களின் சகோதரர் திரு. ஈசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரை மேஜர். நளன் அவர்களின் சகோதரி திருமதி. சிவேந்திரா தங்கவேல் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து துயிலும் இல்லப் பாடலுடன் அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்கள். அடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலைநிகழ்வுகளுடன் அரங்க நிகழ்வு இடம்பெற்றது.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பங்குபற்றியமை அனைவருக்கும் நிறைவாக அமைந்தது.
இந்நிகழ்வு ஏற்பாடுகளில் பங்களித்த தேசிய செயற்பாட்டாளர்களிற்கும் கலந்துகொண்ட தேசப்பற்றுமிக்க மக்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்வரும் நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக செய்வோம் எனவும் உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment