இந்த ஆண்டில் பிறந்த தமிழ்ப்பெயர் வைத்துள்ள குழந்தைகளை கௌரவிக்கும் முகமாக 5600 ரூபா வீதம் அவர்களது வங்கிக்கணக்கில் வைப்புசெய்வதற்கான திட்டம் நவம்பர் 26 சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 குழந்தைகளுக்கு இவ்வுதவித்திட்டம் 26 - 11 - 2022 அன்று வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக, வவுனியா மாவட்டத்திலுள்ள இருபத்தியிரண்டு குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கு ஆரம்பிக்கும் நிகழ்வு 18 - 12 - 2022 அன்று நடைபெற்றது.
தொடர்ந்து மற்றைய மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட உதவியை சிட்னி தமிழ் உறவுகள் வழங்கியிருந்தனர்.
திருகோணமலை மாவட்டம்
வவுனியா மாவட்டம்
No comments:
Post a Comment