கான்பராவில் நடைபெற்ற அகதிகளின் நீதிக்கான பேரணி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 6 December 2022

கான்பராவில் நடைபெற்ற அகதிகளின் நீதிக்கான பேரணி


Refugee Action Coalition ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட  அகதிகளுக்கான பேரணி 29-11-2022 செவ்வாய்க்கிழமை  கான்பராவில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய மையஅரசின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. தமிழர் சார்பாக Tamil Refugee Council ஊடாக பலரும் கலந்துகொண்டு, அகதிகள் அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 


பத்து வருடங்களுக்கு மேலாக நிரந்தர விசா இன்றி வாழும் தமிழ் அகதிகளுக்கு உடனடியாக நிரந்தர விசா வழங்குமாறு கோரி நடைபெற்ற இப்பேரணியில் சிட்னி மற்றும் மெல்பேர்ண் பெருநகரங்களிலிருந்து பேரூந்துகளில் வந்து பெருமளவு மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு ஏனைய மாநிலங்களில் இருந்தும் நேரடியாக பலர் வருகைதந்திருந்தனர். 


இப்பேரணியில் கலந்துகொண்ட ஈழத்தமிழ் அகதிகள் சார்பாக ஐந்து பேர் Senators Nick McKim and Mehreen Faruqi ஆகியோரை சந்தித்து தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








































No comments:

Post a Comment

Post Bottom Ad