உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - சிட்னி - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 22 May 2023

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - சிட்னி - 2023


தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றுள்ளது. 18-05-2022 வியாழக்கிழமை மாலை 06.35 மணிக்கு Redgum Function Centre மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


பொதுச்சுடரினை, முள்ளிவாய்க்கால் மண்ணில் மனிதப் பேரவலத்தில் சிக்கி, கொடிய இனவழிப்பின் சாட்சியமாய் தனது சகோதரனை இறுதிப்போரில் காணாமலாக்கப்பட்ட நிலையில், சிட்னியில் வாழ்ந்துவரும் தமிழ்ச்செல்வன் செல்வகுமார் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றினார்.


தொடர்ந்து, அவுஸ்திரேலிய பழங்குடிமக்களின் கொடியை  சிட்னி தமிழ் மன்றத்தின் தலைவரும் தமிழ்ச் செயற்பாட்டாளருமான கௌரி கருப்பையா அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை அவுஸ்திரேலிய தொழிற்கட்சி பிரமுகரும் தமிழ்ச் செயற்பாட்டாளருமான துர்க்கா ஓவன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பாலகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


ஈகைச்சுடரினை, மூன்று மாத குழந்தையாக கிளிநொச்சியில் இருந்து ஆரம்பித்த இடப்பெயர்வு, வள்ளிபுரம் வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடங்களாக அலைந்து - பொஸ்பரஸ் குண்டுகளின் தாக்குதலில் அகப்பட்டு தப்பி பிழைத்த குழந்தைகளில் ஒருவராக இன்று சிட்னியில் வாழ்ந்துகொண்டிருக்கும் இசைக்கோ தீபவர்ணன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார். சமநேரத்தில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது சிறுகுழந்தைகளாக உயிர்தப்பிய இளையோரும் ஏனைய இளையோரும் இணைந்து நினைவுச் சுடர்களை ஏற்றினார்கள்.


தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள். 


முதல் நிகழ்வாக, கவிப்பிரியனின் பாடல்வரிகளில் அமைந்த "முடிவல்ல முள்ளிவாய்க்கால்..." என்ற பாடலை உணர்ச்சிகரமான பாடலை ஜெய்கரன் அவர்கள் பாடினார்.


தொடர்ந்து "முள்ளி வாய்க்கால் முடிவா இல்லை..." என்ற பாடலுக்கான நடன நிகழ்வை இளையோர்கள் வழங்கினர். இவ்வாண்டு நினைவேந்தல் நாளுக்கு வெளிடப்பட்ட இப்பாடலுக்கான பாடல்வரிகளை குவேந்திரன் அவர்களும் பாடலை கௌசிக் அவர்களும் பாடியிருந்தார். 


அடுத்ததாக, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்பின் சாட்சியமாய் - ஒரு வயது குழந்தையும் காயப்பட்ட கணவனும் மிகுந்த அவலத்தின் நடுவே தப்பி பிழைத்த தாயாக வாழும் வினோ செல்வராசா அவர்கள் தனது நினைவுப் பகிர்வை வழங்கினார். அவர் தனதுரையில், "இந்த அழிவுகளை கடந்து 14 ஆண்டுகளை கடந்தும் எமது மக்களுக்கான நீதி கிடைக்கவில்லை. என்றோ ஒருநாள் சர்வதேசத்தின் மனச்சாட்சி தமிழர்களுக்கு சார்பாக திரும்பும் என்ற நம்பிக்கையுடன் கொல்லப்பட்ட மக்களின் நீதியும் மாவீரர்களின் இலட்சியங்களும் எங்கள் ஒவ்வொருவரின் கையிலும் தரப்பட்டுள்ளது. நாங்கள் இவர்களுக்காக எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படுவதோடு நாம் தொடர்ந்தும் நீதிக்காக குரல் கொடுக்கவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.


தமிழ் இளையோர்களான கவிவேந்தன் பாலகுமார், தீரன் அன்ரன், புகழோவியன் காந்தரூபன், பிறைக்குமரன் பேரின்பராசா ஆகியோர் தமிழர் இனவழிப்பு பற்றிய நினைவுப் பகிர்வை தமது அனுபவங்கள் ஊடாக ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார்கள்.


தொடர்ந்து, நியு சவுத் வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Anthony D'Adam (Member of the New South Wales Legislative Council) அவர்கள் நினைவேந்தல் நாள் பற்றிய தனது பகிர்வை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, நியு சவுத் வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Hugh McDermott (Member of the Legislative Assembly of New South Wales) அவர்கள் தமிழர் இனவழிப்பு பற்றி வழங்கி காணொளி பதிவு அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, Parramatta Councilor Phil Bradley அவர்களும் தனது நினைவேந்தல் நாள் பற்றிய பதிவை வழங்கினார்.


நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரை ஏற்புடன் நிகழ்வு இரவு 8.30 இற்கு நிறைவடைந்தது.


இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் வலியையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


நினைவேந்தல் நிகழ்வுக்கு, Deputy Mayor Suman Saha - Cumberland City Council, Councillor Diane Colman - Greystanes Ward, Sameer Pandey - Deputy Lord Mayor City of Parramatta, Former Senator Lee Rhiannon ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.


























































===========================================================






No comments:

Post a Comment

Post Bottom Ad