தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2024 & 2025 & 2026 - சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 1 January 2026

தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2024 & 2025 & 2026 - சிட்னி

தாயக மக்களின் உதவித்திட்டத்திற்காக தொடர்ச்சியாக உதவிடும் நோக்கில், மார்ச் 2021 முதல் தமிழ்ஒளி உதவித்திட்டம் என்ற செயற்றிட்டத்தை சிட்னியில் ஆரம்பித்திருந்தோம்.

இதில் பங்காளர்களாக இணைந்துகொள்பவர்களின் பங்களிப்பின் ஊடாக, மாதாந்த உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். 


🔆தமிழ்ஒளி - சனவரி 2024 🔆


பெண் தலைமைத்துவ முன்னாள் போராளி குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி கோரிக்கை வந்துள்ளது. இவரது கணவர் இறுதிப் போரில் காணாமலாக்கப்பட்டுள்ளார். தற்போது வயலில் தோட்டம் செய்து தனது இரண்டு பிள்ளைகளை (தமிழ்மதி தரம் 11, பகலவன் தரம் 9) கற்பித்து வருகின்றார். இவரும் முன்னாள் போராளி ஆவார்.


வழங்கப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா


02. மாவீரர் குடும்ப தனித்துவாழும் தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000


03. மாவீரர் குடும்ப தனித்துவாழும் தாயாருக்கான மாதாந்த உதவி ரூபா 10000


04. மேஜர் பகலவன் (வீரச்சாவு 09-02-2008) மேஜர் பகலவள் (வீரச்சாவு 11-10-2006) 2ம் லெப் இளங்கீரன் (வீரச்சாவு 23-08-2001) ஆகியோரின் 70 வயதான தனித்து வாழும் தாயாருக்கான மாதாந்த உதவியை இம்மாதம் தொடக்கம் மாதாந்த உதவி ரூபா 10000 வழங்க இருக்கின்றோம்.


🔆தமிழ்ஒளி - பெப்ரவரி 2024 🔆


01. மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறையைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ முன்னாள் போராளி குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி கோரிக்கை வந்துள்ளது. இவரது கணவர் குலவீரன் இறுதிப் போரில் காணாமலாக்கப்பட்டுள்ளார். இவரும் இரண்டு கையும் ஒரு காலும் முள்ளிவாய்க்காலில் படுகாயமடைந்துள்ளார். இவரது மகன் 17-01-2009 இல் முள்ளிவாய்க்காலில் பிறந்துள்ளார். தற்போது ஆண்டு 11 இல் கல்வி கற்று வருகின்றார்.


கடுமையாக காயமடைந்து உள்ளபோதும் சுயதொழில் செய்வதற்கான ஆர்வம் உண்டு. சத்துணவு மாவை கொள்வனவு செய்து விற்பனை செய்ய விரும்புகின்றார்.


வழங்கப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா


02. மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - மார்ச் 2024 🔆


01. இவரது தந்தையும் தாயும் முள்ளிவாய்க்காலில் சாவடைந்துவிட்டனர். இவரது சகோதரன் 18 ஆண்டுகளுக்கு முன்னர் மணலாற்றுச் சண்டையில் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்க முடியாதவராக இவரது பராமரிப்பில் உள்ளார். இவருக்கு கலிற்றர் மாற்றுவதற்கு கிழமைக்கு ஒரு தடவை ஒரு தாதியர் வந்து மாற்றவேண்டிய நிலை உள்ளது.


இவரது சகோதரி ஒருவரும் தலையில் காயமடைந்து இவரது பராமரிப்பில் இருந்து வருகின்றார்.


இவரும் இவரது கணவரும் முகமாலை சண்டையில் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர். இவரது கணவர் இறுதிப்போரின்போது பொக்கணையில் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சித்திரவதை பாதிப்பினால் தற்போது இரத்தப்போக்கு உண்டு.


வங்கியில் கடன் எடுத்து ஆட்டோ வாங்கி தொழில்செய்துவந்தார். அதன் கடனை அடைக்க முடியாமல் போனதால் எடுத்துச்சென்றுவிட்டனர். அதனை மீளெடுத்து தொழில்

செய்ய உதவி கேட்கின்றார்கள்.


வழங்கப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா


02. மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.



🔆தமிழ்ஒளி - ஏப்ரல் 2024 🔆



01. லெப்ரினன்ற் கேணல் பிறையாளர் / சுட்டா அவர்களின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பிற்கான உதவி செய்யப்படவேண்டியுள்ளது. பெண் தலைமைத்துவமாகவும் இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பம் இது. மூத்த மகள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவருகின்றார். இரண்டாவது மகன் தொழில்கல்வி கற்றுவருகின்றார்.


வழங்கப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா


பயனாளர் தெரிவு - தாயக மாவீரர் குடும்பநல செயற்பாட்டாளர்கள்

பரிந்துரை - மருத்துவர் ஜெயமோகன்

திட்ட முன்னெடுப்பு - சதீஸ்



02. மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.


03. யாழ் மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் வதனன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்கான உதவி ரூபா 10000 வழங்கப்பட்டது



🔆தமிழ்ஒளி - மே 2024 🔆


இம்மாத திட்டத்தில் பின்வரும் உதவிகளை செய்யவிருக்கின்றோம்.

 

01. மட்டக்களப்பு அம்பிலாந்துறையைச் சேர்ந்த லெப் கேணல் கலைஞன் (வீரச்சாவு-07-05-2007) அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி செய்யப்படவேண்டியுள்ளது.

திட்டமிடப்பட்ட உதவி: 2 இலட்சம் ரூபா


02. மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.


03. யாழ் மாவட்டத்தில் வசிக்கும் மாவீரர் வதனன் அவர்களின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்கான உதவி ரூபா 10000 வழங்கப்பட்டது



🔆தமிழ்ஒளி - ஜூன் 2024 🔆


தமிழீழ நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட மாவீரர் லெப். கேணல் மணியரசன் அவர்களின் மனைவி மற்றும் மகன் ஒருவரின் வாழ்வாதார உதவியாக கோழிக்கூட்டை திருத்தி மேலதிக கோழிகள் வாங்குவதற்கான உதவியாக ரூபா 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


மேலும் மாதாந்த உதவியாக மூன்று மாவீரர் பெற்றோருக்கு தலா 10000 ரூபா படியும் மாவீரர் ஒருவரின் பிள்ளைகளின் கல்விக்காக ரூபா 10000 உம் ஜூன் மாத தமிழ்ஒளி திட்டத்தில் வழங்கப்பட்டது.



🔆தமிழ்ஒளி - ஜூலை 2024 🔆


அரசியல்துறை போராளியாக செயற்பட்ட இசைப்பிரியன் அவர்கள் போரில் காயமடைந்ததால் கடினமான வேலைகளை செய்யமுடியவில்லை. அவருக்கு 10 வயதுக்குட்பட்ட இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். கோழி வளர்ப்பில் ஆர்வமாக செயற்படும் அவரின் தொழில் முயற்சியை முன்னேற்றும் நோக்கோடு வாழ்வாதார உதவியாக இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


மேலும் மாதாந்த உதவியாக மூன்று மாவீரர் பெற்றோருக்கு தலா 10000 ரூபா படியும் மாவீரர் ஒருவரின் பிள்ளைகளின் கல்விக்காக ரூபா 10000 உம் ஜூன் மாத தமிழ்ஒளி திட்டத்தில் வழங்கப்பட்டது.


 🔆தமிழ்ஒளி - ஓகஸ்ட் 2024 🔆


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேரந்த முன்னாள் போராளிகளான இந்தக் குடும்பத்தில் 61 வயதான இவர் 1985 தொடக்கம் 2009 இல் முள்ளிவாய்க்கால் வரை போராட்டத்தில் ஈடுபட்டு நின்றிருந்தார். இவரது மனைவியும் 1990 தொடக்கம் முள்ளிவாய்க்காலில் காயப்பட்டு ஒரு பார்வையை இழந்துள்ளார். இவர்களின் மூன்று பிள்ளைகளில் ஒருவர் பிறப்பில் இருந்தே படுத்த படுக்கையாக இருந்து கடந்த மாதம் சாவடைந்திருந்திருந்தார். ஏனைய இருவரும் கல்வி கற்றுவருகின்றார்கள். இவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


மேலும் மாதாந்த உதவியாக மூன்று மாவீரர் பெற்றோருக்கு தலா 10000 ரூபா படியும் மாவீரர் ஒருவரின் பிள்ளைகளின் கல்விக்காக ரூபா 10000 உம் ஜூன் மாத தமிழ்ஒளி திட்டத்தில் வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - செப்ரம்பர் 2024 🔆


தற்போது கிளிநொச்சியில் வசித்துவரும், இறுதிப் போரில் காணாமலாக்கப்பட்ட நிதித்துறையைச் சேர்ந்த மாவீரர் மானவன் அவர்களின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் (தரம் 10, தரம் 8) வாழ்வாதாரத்திற்கான உதவி கோரப்பட்டுள்ளது. மானவன் அவர்களின் மனைவியும் போரில் வலது கால் முழங்காலுக்கு கீழ் துண்டிக்கப்பட்டுள்ளார். மற்ற காலிலும் காயங்கள் உள்ளன. தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார்.


மாடுவாங்கி வாங்கி வளர்க்க விரும்புகின்றார்கள். அதற்கான உதவியாக இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - ஒக்ரோபர் 2024 🔆


தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்துவரும் சாள்ல்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மாவீரர் புரட்சி (வீரச்சாவு 15-04-2009) அவர்களின் துணைவியார் மற்றும் மூன்று பிள்ளைகளின் வாழ்வாதார உதவிக்காக இரண்டு இலட்சம் ரூபா வழங்க உள்ளோம். முன்னாள் போராளியான இவர் புடைவைகளை கொள்வனவு செய்து, கோவில் திருவிழாக்களில் விற்பனை செய்வதன் மூலமே தனது குடும்பத்தை பராமரித்து வருகின்றார். 


மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.



🔆தமிழ்ஒளி - நவம்பர் 2024 🔆


அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த லெப் கேணல் பவா அவர்களின் மனைவி தனது மகனுடன் சுயதொழில் செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றார். அவரது மகன் தற்போது இறுதியாண்டு தொழிநுட்ப கல்வியை கற்று வருகின்றார். உணவு மற்றும் சிற்றுண்டி செய்து விற்பனை செய்து தனது வாழ்வாதாரத்தை தொடர்ந்துவரும் அவருக்கும் அவரது மகனின் கல்வியை தொடர்வதற்கும் உதவியாக 2 இலட்சம் ரூபா உதவியை வழங்க உள்ளோம்.


மூன்று மாவீரர் பெற்றோர்களுக்கான மாதாந்த உதவியாக 10000 ரூபா படி மொத்தம் 30000 ரூபா வழங்கப்பட்டது.


=================


🔆தமிழ்ஒளி - ஜனவரி 2025🔆


தற்போது யாழ் மாவட்டத்தில் வசித்துவரும் மருத்துவபிரிவை சேர்ந்த ராகுலன் (18.5.2009 அன்று காணாமல் போனார்) அவர்களின் மனைவி தனது பிள்ளைகளுடன் மிக நெருக்கடியான நிலையில் நல்லூரில் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் ஒருவர் தற்போது பல்களைக்கழகத்தில் உயிரியல் படித்து வருகிறார். அவர்களின் உடனடியான வாழ்வாதார உதவிக்காகவும் (தையல் வேலை) மற்றும் அவரது மகளின் கல்வியை தொடர்வதற்கும் உதவியாக 1.5 இலட்சம் ரூபா உதவி வழங்கப்பட்டது.



🔆தமிழ்ஒளி - பெப்ரவரி 2025🔆


தற்போது யாழ் மாவட்டத்தில் வசித்துவரும் கடற்புலிகளின் மருத்துவபிரிவை சேர்ந்த இயல்வீரன் (வீரச்சாவு 15.5.2009) அவர்களின் மனைவி தனது மகளுடன் மிக நெருக்கடியான நிலையில் மீசாலையில் வாழ்ந்து வருகிறார். 


அவர் 2009 இறுதிப்போரில் கடுமையாக காயப்பட்டு இன்னும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வருகிறார், அவரது மகள் தற்போது ஆண்டு 11இல் படித்து வருகிறார். 


அவரின் உடனடியான சிகிச்சைக்கும் மற்றும் மகளின் க.போ.தா சாதரண பரீட்சைக்கு உரிய வகுப்புகளுக்கும் (tuition) உதவியாக உடனடியாக 50,000 ரூபாவை இந்த திட்டத்தை முன்னெடுக்கும் அருணகிரி தமிழ்ஒளி சார்பாக வழங்கியுள்ளார். மற்றும் அவரது மகளின் கல்வியை தொடர்வதற்கும், அவரால் இயலுமான ஒரு சுயதொழில் (கோழி வளர்ப்பு) உருவாக்கத்திற்கும் உதவியாக 1.5 இலட்சம் ரூபா உதவி வழங்கப்பட்டது.



🔆தமிழ்ஒளி - மார்ச் 2025🔆


மார்ச் மாத திட்டத்தில் பின்வரும் உதவியை செய்ய உள்ளோம்.


தற்போது முல்லைத்திவு தேவிபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அவர்களின் வாழ்வாதார உதவியாக 1.75 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.


அவர் 2009 இறுதிப்போரில் கடுமையாக காயப்பட்டு, பின் தடுப்பில் பல வருடங்கள் இருந்தவர். விடுவிக்கபட்ட பின் சில வருடங்கள் கூலி வேலைகள் செய்து தற்போது தன் முயற்சி மூலம் சிறிய தையல் கடை போட்டு வேலை செய்ய முயன்று வருகிறார். அவருக்கு 2 பிள்ளைகள். இவர் 1996ஆம் ஆண்டு, 1999ஆம் ஆண்டிலும் காயப்பட்டவர். 


🔆தமிழ்ஒளி - ஏப்ரல் 2025🔆


தற்போது முல்லைத்திவு ஸ்கந்தபுரத்தில் வசித்துவரும் முன்னால் போராளியான உதயகுமார் (படையப்பா) அவர்களின் வாழ்வாதார உதவிக்காக 1.75 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.


அவர் 2009 இறுதிப்போரில் கடுமையாக காயப்பட்டு, பின் தடுப்பில் பல வருடங்கள் இருந்தவர். விடுவிக்கபட்ட பின் கூலி வேலைகள் செய்து வருகிறார். நிரந்தர வேலையில்லை. பலமாக காயப்பட்டதனால் ஒரு சில மட்டுப்படுத்தப்பட்ட வேலைகளே செய்யக்கூடியதாக உள்ளது. அவர் ஒரு பசு வாங்கித்தர கேட்டுள்ளார். 


🔆தமிழ்ஒளி - மே 2025🔆


தற்போது திருகோணமலை மாவட்டத்தில் தெகிவத்தையில் வசித்துவரும் முன்னாள் போராளியான நித்தி அவர்களின் வாழ்வாதார உதவிக்காக 2 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.


அவர் 2009 இறுதிப்போரில் கடுமையாக காயப்பட்டு, இடது காலை இழந்து, பின் தடுப்பில் பல வருடங்கள் இருந்தவர். ஒரு கால் இல்லாத காரணத்தால் ஒரு சில மட்டுப்படுத்தப்பட்ட வேலைகளே செய்யக்கூடியதாக உள்ளது. அவர் மீன் தோழில் செய்வதற்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி உதவுமாறு கேட்டுள்ளார். 


🔆தமிழ்ஒளி - ஜூன் 2025🔆


தற்போது விசுவமடுவில் வசித்துவரும் முன்னாள் போராளிகளான நாகேந்திரன் மற்றும் அவரின் மனைவியின் வாழ்வாதார உதவிக்காக 1.5 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.


அவர் 2009 இறுதிப்போரின் பின்னர் தடுப்பில் இருந்து, 2014இல் புகையிரதத்துடன் விபத்துக்குள்ளாகி நாகேந்திரன் பலத்த காயங்களுடன் வாழ்ந்துவருகிறார். தற்போது விசுவமடு சந்தையில் சிறிய கடை ஒன்று நடத்தி வருகிறார். அவரது வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த இந்த உதவி பயன்படும் என நம்புகின்றோம். 


🔆தமிழ்ஒளி - ஜூலை 2025🔆


ஜூலை மாத திட்டத்தில் வழங்கப்பட்ட உதவி


பயனாளர் தெரிவு - சொரூபன்

பரிந்துரை - சசிகரன்

திட்ட முன்னெடுப்பு - வசந்தன் 



🔆தமிழ்ஒளி - ஆகஸ்ட் 2025🔆


விசுவமடுவில் வசித்துவந்த முன்னாள் நிதித்துறை போராளி கலைமுகிலன் உயர் குருதி அழுத்தம் காரணமாக மாரடைப்பால் இறந்துவிட்டார் (11/02/2025). அவரது திடீர் இறப்பினால் மனைவியும் மகளும் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்வாதார உதவிக்காகவும், மகளின் படிப்பு செலவுக்காக இந்த மாதம் 3.5 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - செப்டேம்பர் 2025🔆


புதுக்குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் போராளியான கந்தசாமி சாந்தி பாடசாலை புத்தக பைகளை விற்று மிக சிரமத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் 2 லட்சம் ரூபா வழங்கப்பட்டது. 


🔆தமிழ்ஒளி - ஒக்டோபர் 2025🔆


புளியங்குளத்தில் வசித்து வரும் முன்னாள் போராளியான பழினிவேல் கிருஸ்ணகுமார் அவர்களின் மனைவிக்கு சிறுநிரக மாற்று சிகிச்சைக்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் 4 லட்சம் அனுப்ப வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - நொவெம்பர் 2025🔆


உருத்திரபுரத்தில் வசித்து வரும் முன்னாள் போராளிகளான பிரதீபன் நந்தனி அவர்களின் பிள்ளையின் புற்றுநோய் சிகிச்சைக்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், 3 லட்சம் ரூபா வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - டிசம்பர் 2025🔆


டிசம்பர் மாத திட்டத்தில் பின்வரும் 2 திட்டங்கள் செய்யப்பட்டது.


திட்டம் 1

திருகோணமலை மாவட்டம், மூதூரில் வசித்து வரும் முன்னாள் போராளியான தமிழினியன் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.



திட்டம் 2

சிறுநீரக நோயாளிக்கு உதவி கோரல். யுத்தத்தில் ஒரு கண்ணை இழந்த முன்னாள் போராளி ஆண்டியா - பிரின்சி என்பவரின் மகள் பிரிண்சி – கிருஷா.  வயது 16, மாணவி  என்பர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


நெத்தலியாறு, விசுவமடு, முல்லைதத்தீவு .


சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இப் பெண் பிள்ளைக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் கிருமித்தொற்று பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. ஆகவே தனியான மலசலகூடத்திணை பயன்படுத்துமாறு மருத்துவர்கள்  பரிந்துரை செய்துள்ளனர்.


தந்தை ஆண்டியா பிரின்சி கடந்தகாலத்தில் உழைத்த பணத்தின் பெரும் பங்கு இவ் மகளின் மருத்துவ செலவுக்கு செலவு செய்து அவரின் குடும்ப பொருளாதாரம் கீழ் மட்டத்தில் உள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் இவர்களின் குடும்பம் உள்ளது. 


ஆகவே இப் பெண் பிள்ளைக்கு சுகாதார முறைப்படி ஒரு மலசல கூடம் அமைப்பதற்கு உதவி கோருகின்றனர்.


வழங்கப்பட்ட உதவி - 2 இலட்சம் ரூபா



================================


🔆தமிழ்ஒளி - ஜனவரி 2026🔆


முல்லைத்தீவு மாவட்டம், உண்ணாபிலவில் வசித்து வரும் மாவீரர் குயிலனின் மனைவி, பிள்ளைகள் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடை ஒன்றை அமைத்து தர கேட்டுள்ளார்கள். இதற்காக நாம் 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


🔆தமிழ்ஒளி - பெப்ரவரி 2026🔆


பெப்ரவரி மாத திட்டத்தில் பின்வரும் 2 திட்டங்களை செய்ய உள்ளோம்.


திட்டம் 1

நெடுங்கேணியில் வசித்து வரும் முன்னாள் போராளியான செந்தூரன் அவர்களின் குடும்பம் யாருமற்று காட்டுப்புறமொன்றில் தற்காலிக கொட்டகையில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு அவசரமாக மின்சார வசதி ஒன்று ஏற்படுத்திக்கொடுக்க உள்ளோம். இதற்காக 1 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. இவரின் சகோதரிகள் இருவர்  மாவீரர்கள். மாவீரர் 2ம்லெப்டினன்ட் பல்லவி மாலதி படையணி வீரச்சாவு 1997, மாவீரர் கதிர்மதி வீரச்சாவு 2009. 


திட்டம் 2


முல்லைதீவில் வசித்துவரும் முன்னாள் போராளியான விஜிதரன் அவர்கள் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறார். அவர் ஒவ்வொரு வாரமும் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவரின் மருத்துவ செலவுக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.



வழங்கப்பட்ட கல்வி உதவி 


முள்ளம் தண்டு பாதிப்படைந்த தமிழ்ச்செல்வனின் தரம் 10ம், 12ல் படிக்கும் 2 பிள்ளைகள் - 10,000 ரூபாய்

தேவராஜா சுதர்சனாவின் 3 பிள்ளைகள் (அக்சயா தரம் 11, சதுர்சா தரம் 9, திபீசன் தரம் 3) - 15,000 ரூபாய். 

டானியல் மாலதியின் (நீதி நிர்வாகத்துறை) மகள் கவியழகி பல்கலைக்கழகம் 3ம் ஆண்டு -10,000 ரூபாய் 


🔆தமிழ்ஒளி - மார்ச் 2026🔆


முழங்காவில் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான அழகநாதன் அவர்களின் ஆட்டோவை திருத்துவதற்கு அவர் வாழ்வாதாரத்திற்கு 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.



கல்வி உதவி

மூன்று குடும்பங்களுக்கான கல்வி உதவி - மொத்தம் 35000 ரூபா



🔆தமிழ்ஒளி - ஏப்பிரல் 2026🔆


முல்லைத்திவு மாவட்டம், மூள்ளியவளையில் வசித்து வரும் முன்னாள் போராளியான மகிழ்வாணன் அவர்கள் வசிக்கும் இடத்தில் தண்ணீர் வசதி இல்லை. குளாய் கிணறு மற்றும் மோட்டர் அமைக்க 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


கல்வி உதவி

மூன்று குடும்பங்களுக்கான கல்வி உதவி - மொத்தம் 35000 ரூபா


🔆தமிழ்ஒளி - மே 2026🔆


மே மாத திட்டத்தில் பின்வரும் திட்டங்களை செய்ய உள்ளோம்.


திட்டம் 1 

திருகோணமலை மாவட்டம் கல்லம்பத்தையில் வசிக்கும் மாவீரர் பெற்றோர் சக்திவேல் ஜெயபாரதி அவர்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள். அவரது கடிதத்தை இணைத்துள்ளேன். அவருக்கு நாளாந்த வாழ்வாதாரத்திற்கு கோழிக்கூடு அமைத்து கொடுக்கிறோம். மொத்தமாக 2.5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


திட்டம் 2


வவுனியாவில் வசித்துவரும் முன்னால் போராளியான கலைக்கொடி மிகவும் வறுமையான நிலையில் 2 பிள்ளைகள் உடன் வாழ்ந்து வருகிறார். கணவர் இல்லை. அவர் கல் அரியும் உபகரணத்தை வாங்கி தந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ கேட்டுள்ளார். அவருக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


திட்டம் 3

மருத்துவ உதவி

யாழ் மாவட்டம் அச்சுவேலியில் வசிக்கும் மாவீரர் தாயாருக்க்கான மருத்துவ சிகிச்சை திட்டம். அவருக்கு 1 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


கல்வி உதவி

மூன்று குடும்பங்களுக்கான கல்வி உதவி - மொத்தம் 35000 ரூபா


🔆தமிழ்ஒளி - ஜூன் 2026🔆


வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போராளியான டோனி டினேஸ்குமார் அவர்கள் மிகவும் வறுமையில் அவரின் தாயுடனும், சகோதரியுடனும் வாழ்ந்து வருகிறார். அவரது கடிதத்தை இணைத்துள்ளேன். அவரின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தி வரும் முச்சக்கர வண்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. அவரின் முச்சக்கர வண்டியை திருத்தங்கள் செய்வதற்கு 3 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


கல்வி உதவி

மூன்று குடும்பங்களுக்கான கல்வி உதவி - மொத்தம் 35000 ரூபா


🔆தமிழ்ஒளி - ஜூலை 2026🔆


மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னால் போராளியான ரமணிதரன் அவர்கள் மிகவும் வறுமையில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவரது கடிதத்தை இணைத்துள்ளேன். அவர் கடை ஒன்றை திறந்து உள்ளார், அதில் விற்பனை பொருட்கள் வாங்கி போடுவதற்கு 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


கல்வி உதவி

மூன்று குடும்பங்களுக்கான கல்வி உதவி - மொத்தம் 35000 ரூபா



🔆தமிழ்ஒளி - ஆகஸ்ட் 2026🔆


ஆகஸ்ட் மாத திட்டத்தில் பின்வரும் 2 திட்டங்களை செய்ய உள்ளோம்.


திட்டம் 1

யாழ் மாவட்டம், சாவகச்சேரியை சேர்ந்த முன்னால் போராளியான சதீஸ்கரன் அவர்கள் வறுமையில் அவர் பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார். அவரது கடிதத்தை இணைத்துள்ளேன். அவருக்கு கால் இல்லை, அவரின் வீட்டை திருத்தி, வாழ்வாதாரத்திற்கு 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.



திட்டம் 2

மட்டக்களப்பு மாவட்டம், அரசடிதீவு பகுதியை சேர்ந்த முன்னாள் போராளிகளான பாலகுரு சவுந்தர்ராசா, கோமளா அவர்களுக்கான மருத்துவ உதவி திட்டம். ஈரல் சிறுநீரக தொற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வரும் சவுந்தர்ராசா அவர்களின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக 3.5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


கல்வி உதவி

மூன்று குடும்பங்களுக்கான கல்வி உதவி - மொத்தம் 35000 ரூபா 


========================


தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2023 - சிட்னி


தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2022 - சிட்னி


தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் - 2021 - சிட்னி


No comments:

Post a Comment

Post Bottom Ad