சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பு - சைக்கிள் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 14 June 2024

சிட்னி தமிழ் உறவுகளின் பங்களிப்பு - சைக்கிள்


யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த ஈழமதி என்பவர் நீண்டகாலமாக செயற்பட்டு காயமடைந்துள்ள முன்னாள் போராளி.


இவரது தந்தை முள்ளிவாய்க்காலில் முதுகில் காயப்பட்டிருந்து பின் இறந்து விட்டார். இவரது தாயார் இயலாதவர்.


இவர் குறிப்பிட்ட காலங்கள் வேலை செய்து உடல் நிலை இயலாத காரணத்தாலும் இருப்பதற்கு இடம் இல்லாத சூழ்நிலையாலும் பாதுகாப்பற்ற நிலையினாலும் தற்போது வேலைக்கு செல்வதில்லை.


இவரது சகோதரி உஷாந்தி : மாவீரர் லெப்: கலைப்பிரியா 


இவரது இன்னொரு சகோதரி துஷ்யந்தி திருமணமானவர். ஆனால் அவரது கணவர் புலனாய்வுத்தறை போராளி சூட்டி காணாமல் போய்விட்டார் ( இவர் 3 பிள்ளைகளுடன் விசுவமடுவில் வசிக்கின்றார்) 


இவரது இன்னொரு சகோதரி ரதனி : போராளி கலையழகி/ இசைவாணகி (தற்போது சிறிய வேலை செய்கிறார்)


இவரது இன்னொரு சகோதரி புஷ்பாயினி : போராளி ஆதிரை (இறுதிப் போரில் இடுப்பிலும் குதிக்காலிலும் காயம் தற்போது இயலாதவர்)குறிப்பு : இவர்களுக்கு சொந்தக்காணி வீடு மானிப்பாய் சுதுமலையில் உள்ளது. 1995இல் இடம் பெயர்ந்து வன்னிக்கு சென்று இருந்ததால் எமது காணியில் வேறாக்கள் அவர்களது வீட்டினை இடித்து விட்டு தாங்கள் வீடு போட்டு இருந்து நாங்கள் 2020 மீண்டும் எமது ஊர் வரும்போது தங்கள் காணி எனக்கூறி எழும்ப முடியாது என்று குறிப்பிட்டதால், நீதிமன்றில் பல வருடமாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர்களின் குடும்பத்தில் மூன்று பெண்கள் திருமணம் ஆகாத நிலையில் உள்ளனர். தற்பொழுது இறுதிவரை போராளியாகயிருந்த ஈழமதி ஆகிய இவர் ஒரு சைக்கிள் 50000 ரூபாவுக்கு வாங்கியுள்ளார். ஆனால் நான் கடுமையான நோய்பட்டிருப்பதால் அக்கடனை கட்ட முடியாத கடினமான நிலையில் உள்ளார். 


இதற்கான அவசர உதவியாக 50000 ரூபா உதவி அனுப்ப்பட்டது.


இதற்கான பங்களிப்பை சிட்னி தமிழ் உறவுகளான செல்வா குடும்பத்தினர் $100 உம் கணேஸ் குடும்பத்தினர் $150 உம் வழங்கியுள்ளனர்.


இத்திட்டத்திற்கான பங்களிப்பை வழங்கிய சிட்னி தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்

No comments:

Post a Comment

Post Bottom Ad