தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றுள்ளது. 18-05-2026 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு Redgum Function Centre மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுச்சுடரினை இறுதிப் போர்க்காலத்தில் 21-01-2009 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் 2ம் லெப்ரினன்ற் ஈழக்குமரன் அவர்களின் சகோதரி திருமதி. றொபினா ஜெகாந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, பூர்வகுடி மக்களின் தேசியக் கொடியினை, சிட்னி தமிழ் மன்றம் அமைப்பின் தலைவர் பேரின்பமூர்த்தி ஆறுமுகசாமி அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியினை
தமிழ்ச் செயற்பாட்டாளர், கம்பர்லாந்து நகரசபை கவுன்சிலர் திரு. சுஜன் செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திருமதி. நிதர்சினி செல்வகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை, இறுதிப் போர்க்காலத்தின் தமிழர் இனவழிப்பின் சாட்சியாய் வாழும் செல்வி ஓவியா விந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். சமநேரத்தில், இளையோர்கள் இணைந்து நினைவுச் சுடர்களை ஏற்றினார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
முதல் நிகழ்வாக ஆங்கிலத்தில் இளையோர் சார்பில் செல்வி. மோகிதா செல்வராசா அவர்கள் இனவழிப்பு நாள் பற்றிய சிறிய உரையை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழீழத் தாயக மக்களின் வலி சுமந்த வரலாற்றை பதிவு செய்யும் விதமாக இளையோர்கள் இணைந்து "அலையின் ஓரம் - தமிழர் ஓலம் - வானைப் பிளந்ததே என்ற பாடலுக்கான நடனத்தை உணர்வுபூர்வமாக வழங்கினார். இந்நடனத்தை கலாநிதி திருமதி. யசோதரா சிங்கராஜர் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.
தொடர்ந்து, நியுசவுத் மாநில மேலவை உறுப்பினர் அந்தனி டிஅடம் அவர்கள் தனது உரையை வழங்கினார்.
நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரை ஏற்புடன் நிகழ்வு இரவு நிறைவடைந்தது.
இந்நிகழ்வை இளையோர்களான ஓவியன் காந்தரூபன், லவனிகா குவேந்திரன், பரணிதா பாஸ்கரன் ஆகியோர் தொகுத்து வழங்க, கதிரினி இரட்ணகுமார் அவர்கள் நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் வலியையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment