சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2026 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 27 November 2026

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2026


தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வுக்காக, ஓரு கட்டமைக்கப்பட்ட விடுதலை இயக்கமாக, உயரிய இலட்சிய பயணத்தில், தமது குறிக்கோளை எந்த சமரசத்திற்கும் இடமின்றி, இறுதிவரை உறுதியுடன் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை 27-11-2026 அன்று International Peace Park, Seven Hills இல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.


இந்நிகழ்வை அருளினி, இசைக்கோ ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.  


மாவீரர் நாள் நிகழ்வின் தொடக்க நிகழ்வாக, பொதுச்சுடரினை 01.08.2007 அன்று வீரச்சாவடைந்த லெப்ரினன்ற் கேணல் நந்தகுமார் அவர்களின் சகோதரி அனுசா ஜெராட் அவர்கள் ஏற்றிவைத்தார். 


தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் கலை அன்ரன் அவர்கள் அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை லெப்ரினன்ற் அக்னிபாலன் அவர்களின் சகோதரி - மகளிர் அணிச் செயற்பாட்டாளர் தன்சிகா புவிராஜசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் நவேந்திரா காளிராசா

அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியையும் ஏற்றிவைத்தார். 


தொடர்ந்து, தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைகள் ஒலிக்கப்பட்டு, மணி ஒலி எழுப்பப்பட்டு, தமிழீழத் தேச விடுதலைக்காக, தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை மகத்தான தியாகங்களை புரிந்து நின்ற மாவீரர்களை நெஞ்சங்களில் இருத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


தொடர்ந்து, மாவீரர் நாளுக்கான முதன்மை ஈகைச்சுடரினை, 2ம் லெப்ரினன்ற் சின்னகோபி, மேஜர் இரும்பொறை, லெப்ரினன்ற் உதயபாரதி அவர்களின் சகோதரி சசிகலா குவேந்திரன் 

அவர்கள் அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர்களும் மற்றும் உரித்துடையோர்களும் 320 ற்கும் மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களை தாங்கிய மாதிரி கல்லறைகளுக்கு ஏற்றிவைத்தனர். 


அதனைத் தொடர்ந்து துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட அனைவரும் உணர்வு மயமாக மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தினர். மாவீரர் நாள் உறுதியரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பணியகப் பொறுப்பாளர் ஜனா அவர்கள் வாசித்தார்.  தொடர்ந்து, மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.


தொடர்ந்து, மலர்வணக்க நிகழ்வு நிறைவடையும் வேளையில், "வீரன் மண்ணில் வீழும்போது..." என்ற தாயகப்பாடலை சிருஸ்திகா செல்வம் அவர்களும்,  "கல்லறைகள் விடை திறக்கும்" என்ற பாடலை காந்தன் அவர்களும் உணர்வுபூர்வமாக பாடினார்கள். தொடர்ந்து, "உலகத்தமிழனினே எண்ணிப்பார்..." என்ற பாடலை கமலநாதன் ஐயா அவர்கள் பாடினார். அதனைத் தொடர்ந்து, ஈழநிலா அழகன் அவர்கள் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பற்றி ஆங்கிலத்தில் சிறிய உரை வழங்கினார்.


அதனைத்  தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் Hugh McDermott MP அவர்களைச் சிறப்புரையாற்றினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் நிகழ்வுகளில் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பங்கேற்று, தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். கடந்த வாரம் மாநில நாடாளுமன்றத்தில் தனது அரசியல் பயணத்தின் நிறைவுரையை ஆற்றியிருந்தார்.


தொடர்ந்து சிறார்கள் இளையோர்கள் இணைந்து மாவீரர்கள் பாடல்களுக்கு உணர்வுமயமான நடனநிகழ்வை வழங்கினர்.


இந்நடன நிகழ்வில் கீதா, நிதர்சினி, பைரவி ஆகியோரின் நெறியாள்கையில்:


Sanoshan Selvakumar 

Jasitharan Jeyapalan 

Yatheesh Jeyapalan 

Jesinthan Jeyapalan

Ashvith Sinthujan 

Akshith Sinthujan 

Tishan Uthayashankar

Sharlash Jeyasotharan


ஆகியோரும்


Siyagsha Naguleswaran

Lakshara Selvakumar 

Praveena Pratheeparajan

Rema Karunaiventhan

Pithurshika sivarajha 

Abira Ashokkumar

Evanshka Jeyasotharan

Thinusha Kuventhiran 

Thujania Uthayashankar


ஆகியோரும்


Vaanila Nakulaseelan

Akshaya keethan

Vinistan  Nishara

Vinusha Satheeswaran

Akshika sivarajha

Pranave umashankar

Katreena Jeyarupan 

Dheekshidhaa Danushan

Meleesha Tharshan


ஆகியோரும் இணைந்து வழங்கினர்.


நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வை உணர்வுபூர்வமாக நினைவுகூருவதற்கு பல நாட்களாக மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளில் தங்களை பங்களித்து நின்றும், மாவீரர் நாளில் தங்கள் முழுப்பங்களிப்பையும் வழங்கி நின்றும், நிகழ்வு நிறைவடைந்த பின்னரும் அனைத்து துப்பரவு பணிகளிலும் பங்களிக்க காத்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து, உறுதியேற்றலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.


மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழகத்திலிருந்து நாஞ்சில் சம்பத் ஐயா அவர்கள் வருகை தந்திருந்தார். விமானம் வந்தடைய தாமதமானதால், நிகழ்வு நிறைவடையும்வேளையில் வந்து கலந்துகொண்டிருந்தார். நாஞ்சில் சம்பத் ஐயா அவர்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர். ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு மேடைகளில் குரல் கொடுத்தவர். குறிப்பாக, 2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றியதற்காகத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் 4000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

காந்தள் மலர் இணைப்பு

























































































No comments:

Post a Comment

Post Bottom Ad