
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒருசேரநினைவுகூருகின்ற தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் மாநகரில் Davy Lane Reserve, Forest Hill மைதானத்தில் 27.11.2026 வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வானது மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வை செல்வி கெனுஜா செல்வக்குமார் அவர்கள் தமிழ்மொழியிலும் செல்வன் பகலவன் சந்திரகுமாரன் அவர்கள் ஆங்கிலமொழியிலும் தொகுத்து வழங்கினார்கள்.
மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு தயாநிதி கருணாநிதி அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு தயாபரன் மகாலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
முதன்மைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு சஜிந்தன் குணராசா அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தாயக விடுதலைப் போராட்டத்தில் முதல்க்களப்பலியாகிய லெப் சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் ஜெயந்தன் அவர்களது சகோதரன் டிஜந்தன் நவரட்ணம் அவர்களும், முதற்பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் லெப் வாகரையான் அவர்களது சகோதரி திருமதி தேனுகா அர்சுதன் அவர்களும் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தார்கள்.
சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய மாதிரி வடிவக் கல்லறைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தனர். அதேநேரத்தில் துயிலுமில்லப் பாடலும் ஒலிக்க மக்கள் மாவீரர்களின் நினைவுக்கல்லறைகளுக்கு முன்பாக அந்தப்பாடலோடு ஒன்றித்தனர்.
அடுத்து உறுதியுரையும் மலர்வணக்கமும் இடம்பெற்றது.
மலர்வணக்கத்தின்பொழுது தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்களது இசைநெறியாள்கையில் மெல்பேர்ண் கலைஞர்கள் மாவீரர்களின் நினைவுகளைப் போற்றுகின்ற இசைப்பாடல்களை மாவீரர்களுக்கு சமர்ப்பணமாக இசைத்தார்கள்.
மெல்பேர்ண் நகரில் அனைத்துப்பகுதிகளிலும் வாழ்கின்ற பெருந்திரளான தமிழ்மக்கள் வருகைதந்து நிகழ்விடத்தின் மையத்தில் நிறுவப்பட்ட மாவீரர் நினைவுப் பொதுக்கல்லறைக்கும் ஏனைய மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மாதிரி வடிவக் கல்லறைகளுக்கும் மிகநீண்டவரிசையில் நின்று உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
மலர்வணக்கம் நிறைவுற்றதும் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றலுடன் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2026 நிகழ்வுகள் யாவும் இரவு 8.00 மணியளவில் நிறைவடைந்தது.
வழமைபோன்று இவ்வாண்டும் மாவீரர்கள் நினைவு சுமந்த பதிவுகள் உள்ளிட்ட இன்னும்பல பதிவுகளையும் உள்ளடக்கிய காந்தள்மலர் சஞ்சிகை வெளியிடப்பட்டது. அத்துடன் 2026ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் நாட்காட்டியும் தாயக படைப்பாளர்கள் எழுதிய போர்க்கால நாவல்கள், தமிழீழத் தேசியச்சின்னங்கள் பொறிக்கப்பட்ட சேலைகள் மற்றும் கவிதைத் தொகுதிகள் முதலான வெளியீடுகளூம் விற்பனைசெய்யப்பட்டன. அவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றதையும் அவதானிக்கமுடிந்தது.












.jpeg)
.jpeg)
.jpeg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments:
Post a Comment