தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு - சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 6 February 2021

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு - சிட்னி

 இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக,  இன்று 06-02-2021  சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.


சிட்னி பரமட்டா நகரில் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் இளையவர்கள் முதல் மூத்தவர்கள் என பெருமளவான தமிழ் மக்களோடு பல்லின சமூகமக்களும் என பலர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில் இளம்செயற்பாட்டாளர் ரேணுகா இன்பகுமார், நியுசவுத் மாநில அவை உறுப்பினர் Dr Hugh Mcdermott, அவுஸ்திரேலிய முன்னாள் மேலவை உறுப்பினர் லீ றியானன், நியுசவுத் வேல்ஸ் மாநில மேலவை உறுப்பினர் Anthony D'Adam, தமிழ்ச் செயற்பாட்டாளர் Durga Owen ஆகியோர் உரையாற்றினர்.


மாலை ஆறுமணிவரை நடைபெற்ற நிகழ்வில் Parramatta Councillor Donna Davis, Cumberland Councillor Lisa Lake, Cumberland Councillor Ola Hamed, Former Parramatta Councillor James Shaw, Dr Diane Coleman, Professor of Politics at Western Sydney University ஆகியோரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad