தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு 2021 - சிட்னி - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 18 May 2021

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு 2021 - சிட்னி



தமிழர் இனவழிப்பு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று 18-05-2021 நடைபெற்றுள்ளது. மாலை 6.40 மணிக்கு வென்வேத்வில் மண்டபத்தில் ஆரம்பமான நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்களும் பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் நிகழ்வை தமிழ்ச்செயற்பாட்டாளர் யாதவன் அவர்கள் தொகுத்து வழங்க, முள்ளிவாய்கால் பேரவலத்தில் ஐந்துவயதில் தப்பி தற்போது சிட்னியில் வாழும் தேனுசன் ரட்ணகுமார் பொதுச்சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்தார்.


தொடர்ந்து அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியக்கொடியை “ஆஸ்திரேலிய தமிழ்க்கலைகள்” கலைக்கூடத்தை நடத்திவரும் முத்தரசு கோச்சடை அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பாலகிருஸ்ணன் பாலா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் விமலசங்கர் அவர்கள் ஏற்றிவைத்தார்.


அதனைத் தொடர்ந்து,  முள்ளிவாய்கால் பேரவலத்தில், இரண்டு வயதில் தப்பி தற்போது சிட்னியில் வாழும் முகிலன் மணிவண்ணன் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


அடுத்து உயிர்நீத்த உறவுகளை நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு அனைவரும் வரிசையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர். மலர்வணக்கக நிகழ்வின்போது, கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில “தமிழர் இனவழிப்பு அறிவூட்டல் வாரம்” சட்ட மசோதாவை நிறைவேற்றிய விஜய் தணிகாசலத்தின் உரை மற்றும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் “மே 18 நினைவேந்தல் நாள்” பற்றிய உரைகளின் தொகுப்பு காணொளியாக திரையிடப்பட்டது.


அதனைத் தொடர்ந்து “தாய்மண்ணை முத்தமிடவேண்டும்” என்ற பாடலை அபீசா பூபாலசிங்கம் அவர்கள் பாடினார. அடுத்து, முள்ளிவாய்க்கால் பேரவத்தில் தப்பிய இளையோர்களின் “இனவழிப்பின் சாட்சிகள் நாங்கள்” என்ற பகிர்வு நடைபெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்த அவர்களின் உணர்வுகளின் பகிர்வுகள் அனைவரதும் மனதையும் நெகிழ வைத்தமை குறிப்பிடத்தக்கது.


அதன் பின்னர், நினைவேந்தல் நிகழ்வில் பங்குபற்றிய
Anthony D'ADAM, Deputy Opposition Whip in the Legislative Council of NSW, Dr Hugh McDermott, State member for Prospect, Lee Rhiannon, former Senator of NSW from the Greens party, Michael Kolossian, Political Affairs Director, Armenian National Committee of Australia, NSW Greens Senator Mehreen FaruqiI ஆகியோரது உரைகள் நடைபெற்றன.


நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் அவலங்களை சுமந்த பதிவுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மாலை 8.15 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.

 

 

 

















































No comments:

Post a Comment

Post Bottom Ad