குயின்ஸ்லாந்து உறவுகளின் தாயக உதவிகள் - 2 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 3 March 2022

குயின்ஸ்லாந்து உறவுகளின் தாயக உதவிகள் - 2

01.குயின்ஸ்லாந்தில் வசிக்கும் அகிலன் அவர்களின் மகன் ஆரூஷ் அவர்களின் பிறந்தநாளை (25-01-2022) முன்னிட்டு 500 டொலர்கள் (87500 ரூபா) அனுப்பப்பட்டு பின்வரும் 3 உதவித்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.


1.1. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிறிஸ்கந்தராசா சந்திரகுமார் (மேஜர் கருணாநிதி அல்லது அருளானந்தம் வீரச்சாவு 02-02-1997) அவர்களின் தாயார் வீட்டில் இடியப்பம் அவித்து விற்பனை செய்துவரும் நிலையில் அதற்கான மேலதிக தேவைகளை நிறைவுசெய்யுமாறு கேட்டதற்கமைவாக 17780 ரூபா செலவில் பொருட்கள் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



1.2. அண்மையில் விபத்தில் கணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் வாழ்வாதார உதவியாக தையல் மிசின் வாங்கித்தருமாறு உதவிக்கோரிக்கை விடப்பட்ட நிலையில் 40970 ரூபாய் செலவில் தையல் மிசின் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.




1.3. தனித்து வாழும் பெண் ஒருவருக்கு அரசி விற்பனை மூலம் சிறிய வியாபாரம் ஒன்றை நடத்துவதற்காக விடப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 150 கிலோ அரிசி (ஆறு பைகள்) 25200 ரூபாய் செலவில் வாங்கிக்கொடுக்கப்பட்டது.


02. 30/08/2021 அன்று யாழ் குருநகரைச் சேர்ந்த பீற்றா அம்மா அவர்களிற்கு பால்மா வேண்டுவதற்காக நிமலேஸ் அவர்களால் 17000 ரூபாய் வழங்கப்பட்டது.

03. 07/07/2021 அன்று  கிளிநொச்சியை சேர்ந்த பூவிழி அவரின் அப்பா கடும் வருத்தம் காரணமாக அடிப்படை தேவைக்காக 16000 ரூபாய் நிமலேஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

04. 02/03/ 2021 அன்று  திருகோணமலையை சேர்ந்த கதிரவன் என்பவரிற்கு உதவியாக17000 ரூபாய் நிமலேஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

05. 15/01/2021 அன்று  வவுனியாவைச் சேர்ந்த அப்புதமலர் என்பவரிற்கு செளவ்மியா அவர்களால் 25000 உதவியாக வழங்கப்பட்டது

06. 10/01 2021 அன்று மட்டக்களப்பைச் சேர்ந்த ரதிமலர் அவர்கட்கு நிமலேஸ் அவர்களால்  கோழிவளர்ப்பிற்காக 30000 ரூபாய் வழங்கப்பட்டது


No comments:

Post a Comment

Post Bottom Ad