சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பேர்த் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 20 May 2022

சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பேர்த்


மேற்கு அவுசுரேலியா பேர்த்தில் தமிழர் இனவழிப்பின் 13வது ஆண்டு நிகழ்வு 18-05-2022 புதன்கிழமை மாலை 07.05 மணிக்கு மடிங்டன் சமூக மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


அவுசுரேலிய தேசியக்கொடியை  Former Fremantle Councillor and Socialist Alliance Candidate In the house of Representatives for Fremantle Mr.Sam Wenwrigh அவர்கள் ஏற்றிவைக்க, அவுசுரேலிய பழங்குடிமக்களின் கொடியை  திரு. புஷ்பகுமார் அருணாச்சலம்  அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை திருமதி. ரூபனா லோகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


சிறப்பாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பொது ஈகைச்சுடர் பீட மாதிரியில் முதன்மை ஈகைச்சுடரினை, திரு. காண்டீபன் யோகநாதன் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள்.


செல்வி யதுர்சிகா ரகுநாதன் அவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் சிறப்புரையை தொடர்ந்து அடுத்த  நிகழ்வாக "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்.." என்ற பாடலுக்கான நடன நிகழ்வை செல்வி யதுர்சிகா ரகுநாதன் மற்றும்  செல்வி தனஞ்ஜெயனி ஜெயகயன் இணைந்து வழங்கினார்கள். 


அதனைத் தொடர்ந்து தமிழீழ ஏதிலிகள், தாயக விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள் என தமிழீழ மக்கள் சார்ந்த அனைத்து விடயங்களிற்கும் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரும் இவ்விடயங்களை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்து 2022 நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்பவரும் முன்னாள் பிறிமென்டல் நகரபிதாவுமாகிய  Mr. Sam Wenwrigh அவர்கள் நினைவுரையாற்றினார். அவர் தனது உரையில், தாயக மக்களின் உரிமை, அவுசுரேலயாவில் ஏதிலிகளின் உரிமைகள் இனவழிப்பிற்கான நீதி தொர்பாகவும் தமிழர் தமது தாயகமான தமிழீழத்தை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து "தாயக மண்ணே..." என்ற பாடலுக்கு செல்வி சிவானியரசி கார்த்திக் அவர்கள் நடனத்தை வழங்கிச்சென்றார். 


அதனைத் தொடர்ந்து செல்வன் கபிலன் சீதாராமன் அவர்களின் "விழ விழ எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்..விழுவதெல்லாம் எழுவதற்கே அழுவதற்கல்ல" சிறப்பு கவிதை இடம்  பெற்றது.


தொடர்ந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு நிமலகரன் சின்னக்கிளி அவர்களின் மே 18 சிறப்பு உரை இடம் பெற்றது. தாயகத்தின் தற்கால பொருளாதாரம் சார் பிரச்சினைகளை மையப்படுத்திய 2022 தமிழர் இனவழிப்பு நாள் நிகழ்வு மற்றும் சிங்கள தேசத்தில் இடம் பெறும் மாற்றங்களை உள்ளடக்கியதாக இவ்வுரை அமைந்தது. 


நிகழ்வில் அண்மையில் ஓவியர் புகழேந்தி அவர்களினால் வெளியிடப்பட்ட "நான்கண்ட தமிழீழம் முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும்" என்ற நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.


முள்ளிவாய்க்கால் வலியையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


இறுதி நிகழ்வாக, தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு இரவு 8.45 இற்கு தமிழர் இனவழிப்பு நினைவு நிகழ்வுகள் நிறைவடைந்தன. 


இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்விற்கு செல்வி யதுர்சிகா ரகுநாதன் தலைமை தாங்கினார்.


No comments:

Post a Comment

Post Bottom Ad