மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் கலைமாலை நிகழ்வு - 2022 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 26 September 2022

மெல்பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் கலைமாலை நிகழ்வு - 2022

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, யாழ் நல்லைக் கந்தன் ஆலய முன்றலில் பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாமல் உண்ணாநோன்பிருந்து 26-09-1987 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது 35 வது ஆண்டு நினைவேந்தலும் தியாகதீபம் கலைமாலை நிகழ்வும் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமையன்று அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் மாநகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.


டாண்டினோங்கில் அமைந்துள்ள Victorian Tamil Community Centre இன் கற்பகதரு மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் இளைய செயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் தலைமையில் பொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 


பொதுச்சுடரினை மாவீரர் லெப் கேணல் சதன் அவர்களின் புதல்வி செல்வி சகிர்த்தனா சிவநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். 


அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மெல்பேர்ண் மூத்தபிரஜைகள் குழுவின் உறுப்பினரும் சமூகச் செயற்பாட்டாளருமான திரு. இராஜராஜேஸ்வரன் தர்மரட்ணம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கபிலன் நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு, மூத்த தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திருமதி. மனோறஞ்சினி நவரட்ணம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


அடுத்து 26-09-2001 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்) அவர்களது திருவுருவப் படத்திற்கு, திருமதி. தேவறூபி சுதாகரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


அடுத்து 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயு (குயிலன்) அவர்களது திருவுருவப் படத்திற்கு திருமதி. தமயந்தி சுபாஸ்குமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.


தொடர்ந்து மூவரினது திருவுருவப்படங்களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த  பொதுமக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள். மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.


அடுத்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், லெப் கேணல் திலீபன் அவர்கள் யாழ்மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட காலங்களில், பெண்கள் கட்டமைப்பான சுதந்திரப்பறவைகள் எனும் அமைப்பை உருவாக்கி அதற்கூடாக விடுதலைப்புலிகள் மகளீர் படையணியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய உழைப்பையும் தொட்டுக்காட்டியதோடு கேணல் சங்கர், கேணல் ராயு ஆகியோர்களின் நினைவுகளையும் மீட்டியிருந்தார்.     


அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் சிறப்புநிகழ்வான தாயகப்பாடல்களை உள்ளடக்கிய கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது. கலைமாலை நிகழ்வை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு. ரமேஷ் பாலகிருஷ்ணர் அவர்கள் தொகுத்து வழங்க,  பின்னணி இசையை உள்ளூர்க் கலைஞர்களான திரு. சீவராஜா மற்றும் அவரது புதல்வர்களான கீர்த்திகன் சீவராஜா, கிருஷிகன் சீவராஜா ஆகியோர்களோடு, ஹனுஷாந்த் முகுந்தாஸ் மற்றும் விதுஷ் விஜயகுமார் ஆகியோர் வழங்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னணிப் பாடகர்களான பிரசாத், சஜிந்தன் மற்றும் டொமினிக் சந்தியாபிள்ளை ஆகியோர்கள் தாயகப் பாடல்களை மிகவும் உணர்வுபூர்வமாகப் பாடினார்கள்.  


கலைமாலை நிகழ்வையடுத்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் பின்னணி இசைக்கலைஞர்கள் நினைவுப்பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இந்நினைவுப் பரிசில்களை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திருமதி. உதயா சிங்கராஜா அவர்கள் வழங்கி கெளரவித்தார்.


இறுதியாக சமூக அறிவித்தல்களின் பின்னர்  தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதிமொழியோடு இரவு 8.00 மணியளவில் தியாகதீபம் கலைமாலை 2022  நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.     






































   


  

No comments:

Post a Comment

Post Bottom Ad