சிறப்பாக நடைபெற்ற அகதிகள் வாரம் - அடிலெய்டு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 17 June 2023

சிறப்பாக நடைபெற்ற அகதிகள் வாரம் - அடிலெய்டு

ஆஸ்திரேலியா தமிழர் விடுதலை நடுவத்தினால் 17/06/2023 அன்று அகதிகள் வாரம் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தெற்கு ஆஸ்திரேலியா சட்ட மேலவையின்  எதிர்க்கட்சி துணைத் தலைவர்   கெளரவ ஜிங் லீ (Honorable Jing Lee, Deputy Leader of the Opposition in the Legislative Council) அவர்கள்  மற்றும் வூட்வில் நகராட்சி உறுப்பினர் திரு.செந்தில் சிதம்பரநாதன் (Mr. Senthil Chidambaranathan Woodville Councilor), அவர்கள்  மற்றும் அடிலெய்டு தமிழ்ச்சங்கம், மக்கள்நலன் காப்பகம் ஆஸ்திரேலியா,ஆஸ்திரேலியா  தமிழ் கலை மற்றும் கலாச்சார மையம்,தமிழ் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வில்  மேடை நிகழ்வாக நடனம் பாடல்கள் மற்றும் ஏதிலிகளாக சிறுவயதில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர். ஆஸ்திரேலியா தமிழர் விடுதலை நடுவத்தினால் படம் வரைதல் போட்டியும் நடாத்தப்பட்ட்து. அதில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கும் கெளரவ ஜிங் லீ (Honorable Jing Lee,) அவர்கள்  பரிசில்கள் வழங்கிவைத்தார்.  இறுதியாக இராப்போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது. இதில் முக்கியமான அம்சமாக மக்கள் தன்னார்வமாகவே உணவுகளை சமைத்து இலவசமாக நிர்வாகத்திற்கு கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.






















No comments:

Post a Comment

Post Bottom Ad