உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - அடிலெய்ட் - 2024 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday 19 May 2024

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - அடிலெய்ட் - 2024

 


தெற்கு ஆஸ்திரேலியாவில் 18/05/2024 அன்று சனிக்கிழமை  மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் மற்றும் எழுச்சிக் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு தெற்கு ஆஸ்திரேலியா அமைப்பினரால் அதன் தலைவர் திரு.வையாபுரி சுதாகரன் தலைமையில் ஒழுங்கமைத்து நடத்தப்பட்டது. தெற்கு ஆஸ்திரேலியா தமிழ் அமைப்புக்கள் மற்றும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர், உள்ளூர் நகரசபை உறுப்பினர்,  Welcoming Australia நிறுவனர் மற்றும் தன்னார்வ நிறுவனர்கள் மக்கள் என பலரும் கலந்து எமது மக்களுக்கான நினைவு வணக்கத்தினை செய்தனர்.


நிகழ்வினை செல்வி.ரஜீபா சின்னத்திரை மற்றும் நிலவன் சுதாகரன் இருவரும் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை திரு.செந்தில்  சிதம்பரநாதன் வூட்வில் நகரசபை உறுப்பினர் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா தமிழ் அமைப்புக்களின் தலைவர்களான  மருத்துவர்.ஜெயசாகரன் புண்ணியமூர்த்தி - தலைவர், இலங்கைத்தமிழ்ச் சங்கம், திரு.கிறிஸ்த்தோப்பர் செலஸ்ட்ரின் இயக்குணர் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தெற்கு ஆஸ்திரேலியா, திரு. கிறிஸ் அன்ரனி - தலைவர் அடிலைட் தமிழ்ச் சங்கம், செல்வன். உதயராஜா உதயகுமார் - தலைவர் தமிழர் விடுதலை நடுவம், திரு. குருசாமி சீனிவாசன்- தலைவர் மக்கள் நலன் காப்பகம் ஆஸ்திரேலியா, திரு. லோரன்ஸ் அண்ணாத்துரை - தலைவர், தமிழ் கலை கலாச்சார  மற்றும் பண்பாட்டு மையம், திரு.தம்பையா முரளீதரன் செயலாளர் தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு தெற்கு ஆஸ்திரேலியா ஆகியோர் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க நிகழ்வு ஆரம்பமானது.


தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டது. ஆஸ்திரேலிய கொடியினை Mr. Tony Zappia, MP, Federal Member for Makin ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பூர்வீக மக்கள் கொடி ஏற்றப்பட்டது. அதனை Mr. Brad Chilcott – Founder of Welcoming Australia அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை திரு.வையாபுரி சுதாகரன் தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக் குழு தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைவர் ஏற்றிவைத்தார்.


அடுத்த நிகழ்வாக, பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை இழந்தவர்களில் ஒருவரான  திரு.காண்டீபன் கிருஷ்ணபிள்ளை ஏற்றிவைக்க,  அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த மக்கள் சுடர்களை  ஏற்றிவைத்தனர். தொடர்ந்து  பொதுப்படத்திற்கான மலர்மலையினை திரு.தர்மலிங்கம் தவம் அவர்கள் அணிவித்தார்.


அதனைத் தொடர்ந்து பொதுப்படத்திற்கான மலர்வணக்கம் அனைவராலும் செலுத்தப்பட்டது. 


தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடந்தது. முதலில்  Mr. Tony Zappia, MP, Federal Member for Makin உரையாற்றினார். அவரது உரையின் முடிவில் தெற்கு ஆஸ்திரேலியா தமிழ் அமைப்புக்களால் கையொப்பமிடப்பட்ட முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கான நீதி கோரும் மனுவை அனைத்து  தலைவர்களும் ஒன்றாக இணைந்து கையளிக்க Mr. Tony Zappia அவர்கள் பெற்றுக்கொண்டார்.


தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது அதனை பிரதம விருந்தினர்களுக்கு திரு. தம்பையா சுதாகரன் வழங்கிவைத்தார். 


தொடர்ந்து நினைவுரைகளை:


திரு. சுதாகரன் வையாபுரி தலைவர் தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு 

திரு. செந்தில் சிதம்பரநாதன் Woodville நகரசபை உறுப்பினர்

திரு ஜோசப் சேவியர்  நாம் தமிழர் தெற்கு ஆஸ்திரேலியா.

Mr Brad Chilcott – Founder of Welcoming Australia 

திரு. கிறிஸ் அந்தோணி தலைவர் அடிலைட் தமிழ்ச் சங்கம் 

திருமதி.Catherin Russell

மருத்துவர். ஜெயசாகரன் புண்ணியமூர்த்தி - தலைவர், இலங்கைத்தமிழ்ச் சங்கம். 


ஆகியோர் வழங்கினர்.


தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்திய பாடல் ஒன்று பாடப்பட்டது. பாடலை முனைவர். ராஜேஷ் பாஸ்கர் அவர்கள் பாடினார். இந்நிகழ்வில் செல்வன். சுதாகரன் தினுசாந் தனது மழலைக்குரலில் எமதுஉறவுகளுக்கு நீதியில்லையே என்று மனம் உருகி பேசிய பேச்சு அனைவரையும் ஆழமாக கவர்ந்தது.


அத்தோடு செல்வன். பிரகாஷ்ராஜ் உதயகுமார் தலைவர்  தமிழர் விடுத்தலை நடுவம் ஆஸ்திரேலியா  அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டு அனைவரது  உறுதியுரையுடன் மேடைநிகழ்வுகள் நறைவுபெற தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உணர்வுபூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது. நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இராப்போசனம் வழங்கப்பட்டது.































No comments:

Post a Comment

Post Bottom Ad