கான்பராவில் 18-05-2024 சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்து, தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழர் இனவழிப்பு வரலாற்றை பிரதிபலிக்கும் நினைவுப் பகிர்வுகள், இளையோர்களின் கவிதை மற்றும் நடன நிகழ்வு என்பன நடைபெற்றுள்ளன.
மேலும், தாயகத்திலிருந்து எழுத்தாளரும் ஆசிரியருமான திரு. தீபச்செல்வன் அவர்கள் காணொளிப்பதிவு மூலமாக தமிழர் இனவழிப்பு நினைவு நாளுக்காக வழங்கிய விளக்கமான சாட்சியப் பதிவு அகலத்திரையில் திரையிடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments:
Post a Comment