உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - பேர்த் - 2024 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - பேர்த் - 2024

 


தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்ச்சி சிறப்பான முறையில் மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுள்ளது. 18-05-2024 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு Maddington Community Centre மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.


நிகழ்ச்சியில் பொதுச்சுடரினை, திரு. செந்தூரன் அவர்கள் ஏற்றினார். தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திரு. தணிகைபாலன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பழங்குடிமக்களின் கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு. சாந்தகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை திருமதி. சுகந்தா அவர்கள் ஏற்றிவைத்தார்.


ஈகைச்சுடரினை, திரு. வாசன் அவர்கள் ஏற்ற சமநேரத்தில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைந்து ஏனையோரும் நினைவுச் சுடர்களை ஏந்தினார்கள்.


தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் பாடல் ஒலிக்க அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள். 


முதல் நிகழ்வாக "ஓலம் கேட்டதோ...." என்ற பாடலுக்கான வணக்க நடன நிகழ்வை செல்வி யதுர்சிகா ரகுநாதன், செல்வி தனஞ்ஜெயனி ஜெயகயன் இணைந்து வழங்கினர். 


தொடர்ந்து "முள்ளிவாய்க்கால் முடிந்துபோன கதையல்ல" என்னும் தலைப்பில் கவியரங்கம் இடம் பெற்றது. இக்கவியரங்கத்திற்கு செல்வி சாய்நிசா புஸ்பகுமார் தலமை தாங்க செல்வன் ஜஸ்வின் ஜெயகயன், செல்வி இலட்சகி விமலாதித்தன்,செல்வி ஜெனுஜா அன்ரனி ஆகிய சிறுவர்கள் தமது கவிதைகளை வழங்கினர்.


அடுத்ததாக, செல்வி சிவானியரசி கார்த்தி அவர்கள் "வலிதாங்கிவரும் மே மாதம்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து செல்வி மதுப்பிரியா கிருபாகரன் அவர்களின் கவிதை இடம்பெற்றது. 


அதனைத் தொடர்ந்து "இறகுகள்" என்னும் தலைப்பில் திருமதி தனா ரவி அவர்கள் கவிதை வழங்கினார். அடுத்து "தாய் மண்ணை முத்தமிட வேண்டும்" என்னும் பாடலுக்கு செல்வி  மதுப்பிரியா கிருபாகரன் அவர்கள் நடனம் ஒன்றை வழங்கினார். 


இறுதியாக இனவழிப்பு நிகழ்ச்சியின் சிறப்புரையை  திரு. நிமலகரன் சின்னக்கிளி அவர்கள் வழங்கினார். 


மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலில் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்புற அமைந்தன. சிறுவர்கள் உணர்வுபூர்வமாக தமது நிகழ்ச்சிகளை வழங்கியமை அனைவராலும் பாராட்டப்பட்டது.


நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இனவழிப்பு நினைவுநாள் இரவு 8.30 இற்கு நிறைவடைந்தது. இன்றைய நிகழ்ச்சிகளை அனைத்தையும் சிறப்புற தொகுத்து வழங்கியவர் செல்வி.  சார்மினி மதிமுகராசா.


இந்நிகழ்ச்சியில், முள்ளிவாய்க்கால் கஞ்சியின் முக்கியத்துவத்தை அதன் வலியையும் உறுதியையும் இளையோர் புரிந்துகொள்ளும் படி உரைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.



















































No comments:

Post a Comment

Post Bottom Ad