தியாக தீபம் திலீபன் நினைவாக தமிழீழ பொது அறிவுப்போட்டி நிகழ்வு, 22/09/24 அனன்று பேனகம் சமூகமண்டபத்தில் நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கத்துடன் ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வினை தமிழ்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.
பொதுஅறிவுப் போட்டிகளை திரு. கிறிஸ்தோப்பர் அமல்ராஜ் சிறப்பாக ஒழுங்குசெய்து வழிநடத்தினார். இந்த போட்டிக்கு பிள்ளைகள் ஆர்வத்துடன் இணைந்து பங்குகொண்டனர். போட்டிகளுக்கான முழு ஆதரவையும் பெற்றோர்கள் செய்துகொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற போட்டிகள் தெற்கு அவுஸ்ரேலியாவில் நடைபறுவது இதுவே முதல்த்தடவை என்பதால் எதிர்காலத்தில் இதைவிட ஏராளமான சிறார்கள் இணைவார்கள் என்பதும் அனைவரது நம்பிக்கையாக இருக்கின்றது.
No comments:
Post a Comment