கரும்புலிகள் நாள் நிகழ்வு சிட்னியில் 05-07-2025 சனிக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. Greystanes Community Centre மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு கரும்புலிகளுக்கான மலரஞ்சலியை உணர்வுபூர்வமான முறையில் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் சகோதரன் ஐங்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சிவகாந் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் விஸ்வரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடரினை லெப். கேணல் முல்லைச்செல்வன் அவர்களின் சகோதரி சுகந்தி கருணைவேந்தன் அவர்கள் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அகவணக்ககம் நடைபெற்று, நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் கரும்புலி மாவீரர்களுக்கான மலரஞ்சலியை செலுத்தினர்.
கரும்புலிகள் தொடர்பான நினைவுப் பகிர்வை சுபா செல்வம் அவர்களும் கௌசியா ஆரோக்கியராஜ் அவர்களும் மிகவும் உணர்வுபூர்வமாக வழங்கினர்.
கரும்புலிகள் நினைவுப் பாடல்களான "ஊரறியாமலே உண்மைகள் உறங்கும்..." என்ற பாடலை கிசோமி சிவநேசன் அவர்களும் "ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்..." என்ற பாடலை பவித்திரா மகேந்திரன் அவர்களும் பாடினர்.
கரும்புலிகள் பற்றிய பேச்சு ஒன்றினை கார்த்திக் பிரபாகர் அவர்களும், தொடர்ந்து கரும்புலிகள் நாள் கவிதை ஒன்றினை லவனிகா குவேந்திரன் அவர்களும் சிறப்பாக வழங்கினர்.
தொடர்ந்து, கரும்புலிகள் நாள் நினைவு நடனத்தை நிதர்சினி செல்வகுமார் நெறியாள்கையில்
லக்க்ஷரா செல்வகுமார்
தினுஷா குவேந்திரன்
சியக்க்ஷா நகுலேஸ்வரன்
பரணிதா பாஸ்கரன்
திவாஷினி சிவராசா
ரேமாம்ருதா கருணைவேந்தன்
ஆகியோர் சிறப்பாக வழங்கினர்.
தொடர்ந்து, கரும்புலிகள் நினைவு நாளில் அனைத்துலக தொடர்பகத்தால் வெளியிடப்பட்ட ஆரிவரோ.. என்ற பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் ஜனகன் சிவராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மூத்த தமிழ்தேசிய செயற்பாட்டாளர் மனோ அவர்கள் இறுவட்டுக்களை வழங்கிவைக்க, முதல் பிரதியை பாடல் இறுவட்டில் பாடல்களை எழுதிய லெப்ரினன்ற் கேணல் ஞானசுதன் அவர்களின் மகன் குவேந்திரன் கணேசலிங்கம் அவர்களும் அவரது இரண்டு பிள்ளைகளும் பெற்றுக்கொண்டனர்.
இரவு 8 மணி வரை தொடர்ந்த நினைவேந்தல் நிகழ்வு, தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு உறுதியுரையோடு நிறைவுபெற்றது.
.jpg)
No comments:
Post a Comment