மெல்பேர்னில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதி அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவுநாள் ஊடாக புத்தக வெளியீடு 2025 நிகழ்வுகள் சிறப்பான முறையில் மெல்பேர்னில் 12-10-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. தமிழீழத் தாயக விடுதலைப் போரில் முதல் பெண் மாவீரராக வீரச்சாவடைந்த 2ம் மாலதி அவர்களின் நினைவு நாளில் ஆண்டுதோறும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இவ்வாண்டு தமிழ்த்தேசியம் சார் புத்தகங்களை அறிமுகப்படுத்துகின்ற சிறப்பு நிகழ்வையும் உள்ளடக்கியதாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை செல்வி லக்சிகா கண்ணன், அவுஸ்திரேலிய மண்ணின் பூர்வீக மக்களிற்கு மரியாதை செலுத்தி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
முதல் நிகழ்வாக இரண்டாம் லெப்ரினன் மாலதி அவர்களின் திருவுருப்படத்திற்கு வாசுகி சொலமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இரண்டாம் லெப்ரினன் மாலதி அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
அடுத்ததாக, அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தின் பின், இரண்டாம் லெப்ரினன் மாலதியைப் பற்றிய சிறப்புரையை செல்வி சகிர்த்தனா சிவநாதன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, இரண்டாம் லெப்ரினன் மாலதியுடன் நேரில் வாழ்ந்து மாலதியுடன் அனுபவமான பெண்மணி வாசுகி சொலமன் அவர்கள், மாலதியுடனான தனது அனுபவத்தை பற்றிய சிறப்புரையை வழங்கினார்.
அடுத்ததாக, பெண்களின் எழுச்சி பற்றிய கவிதை ஒன்றை செல்வி சானுயா சுரேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, புத்தக வெளியீட்டில் இருந்த புத்தகங்களையும், அதன் எழுத்தாளர்களையும் தொகுப்பாளர் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, செம்மணி கவிதைகள் - வாசலிலே கிருசாந்தி நூலின் அறிமுக உரையை அபிதாரணி சந்திரன் அவர்கள் நிகழ்த்தினார்.
தீபச்செல்வன் அவர்களின் சயனைற் நூலின் அறிமுக உரையை கானிலா சொலமன் அவர்கள் நிகழ்த்தினார்.
ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் பொன்வண்டு நூலின் அறிமுக உரையை நம்சிகா சுரேஸ்குமார் அவர்கள் நிகழ்த்தினார்.
வெற்றிச்செல்வி அவர்களின் போராளியின் காதலி நாவலின் அறிமுக உரையை காவிகா சொலமன் அவர்கள் நிகழ்த்தினார்.
அதன் பின்னர், நாவல்களுடன் சேர்ந்து சூரியப்புதல்விகளின் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
செம்மணி கவிதைகள் - வாசலிலே கிருசாந்தி புத்தகத்தை உதயா சிங்கராசா அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
நூலாசிரியர் தீபச்செல்வன் அவர்கள் எழுதிய சயனைற் புத்தகத்தை ஜெயரூபன் நடேசன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
நூலாசிரியர் வெற்றிச்செல்வியின், போராளியின் காதலி புத்தகத்தை நிலாவண்ணன் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் பொன்வண்டு புத்தகத்தை கிருசாந் இரத்தினம் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
நூலாசிரியர் ஆருரண் அவர்களின் ஊமை மோகம் என்ற புத்தகத்தை கொட்வின் பேர்னான்டோ - நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
சூரியப்புதல்விகளின் இறுவெட்டை தேவரூபி அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, நன்றியுரையோடும் தமிழீழ உறுதிமொழியோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றன. புகைப்படப்பிடிப்பிற்கான நன்றியை காவியா சொலமன் அவர்களிற்கு வழங்கப்பட்டது. வழிகாட்டுதலைக்கான நன்றியை றகு கிருஸ்ணபிள்ளை அவர்களிற்கும் வழங்கப்பட்டது.
மெல்பேர்னில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுடன் புத்தக வெளியீடு 2025 நிறைவடைந்தது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விக்டோரியா
No comments:
Post a Comment