கான்பராவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 22 November 2025

கான்பராவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு



தமிழீழ விடுதலைப்போரில் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்ளின் குடும்பங்களுக்கு, அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் அணியினர் ஏற்பாட்டில் இன்று 22-11-2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


மாவீரர்கள் நாளை சிறப்பாக நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் சமநேரத்தில், மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை Canberra — Bormby Street, Isaacs ACT 2607 என்ற முகவரியில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் மாவீரர் நினைவு கூரும் சிறுகலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


பொதுச்சுடரினை சமூக செயற்பாட்டாளர் திருமதி. சியாமளா சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்தார்.


தொடர்ந்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை பெருமாள் செல்வகுமார் அவர்களும், பூர்வகுடிகளின் கொடியினை வேணாட் சந்திரமோகன் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியினை பரஞ்சோதி விக்கினதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு உரிய மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, வருகைதந்த அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது.


தொடர்ந்து சுபா செல்வகுமார் அவர்களின் நெறியாள்கையில்  மாவீரர் வணக்க நடனம் நடைபெற்றது.  வேணாட் அலைனா, செல்வகுமார் லோககுமார், கிருஸ்ணரன் அபிசன், செல்வகுமார் பரிதி ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து, வரலாறு ஒரு வழிகாட்டி என்ற தலைப்பில் கவிதையை பதுமிகா கிருபாகரன் வழங்கினார். அதனை அடுத்து, மாவீரர் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

மாவீரர் கப்டன் புவிராஜ் அவர்களின் சகோதரன் திரு. சண்முகம் செந்தில்மோகன் அவர்களுக்கான நினைவுப்பரிசினை  தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. ரவி அவர்கள் வழங்கி மதிப்பளித்தார்.


மாவீரர் லெப்ரினன்ற் கேணல் மல்லி அவர்களின் உடன்பிறவா சகோதரன் திரு. குணசிங்கம் கிருபாகரன் அவர்களுக்கான நினைவுப்பரிசினை கான்பரா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி கார்த்திகா அம்பலவாணர் அவர்கள் வழங்கி மதிப்பளித்தார்.


மாவீரர் லெப்ரினன்ற் கேணல் றெஜி அவர்களின்  மனைவி மற்றும் மகள் நீலா அவர்களுக்கான நினைவுப்பரிசினை தமிழ்ச்செயற்பாட்டாளர், மருத்துவர் திருமதி. அபிராமி அவர்கள் வழங்கி மதிப்பளித்தார்.


மாவீரர் சந்திரன் மாவீரர் பாமினி  அவர்களின்  நினைவுப்பரிசினை தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் திரு. ரவி மற்றும் திரு. பரஞ்சோதி ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.


பின்பு சிறப்புரையை திருமதி. சுபா செல்வகுமார் அவர்கள் வழங்கினார். அவர் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டினார். “நாங்கள் இன்று புலம்பெயர் தேசத்தில் தமிழராக நிமிர்ந்து நிற்கும் இந்த முகவரியை எங்களுக்கு வழங்கியவர்கள் — தங்கள் உயிரைக் கொடுத்து போராடிய உங்கள் அன்பான மகன்கள், மகள்கள், சகோதரர்கள், துணைவர்கள் - எங்களின் கோவில் தெய்வங்கள் — மாவீரர்கள்” என்று குறிப்பிட்டார்.


இறுதியாக நன்றியுரை இரு மொழிகளில் வழங்கப்பட்டது — தமிழ் மொழியில் ஜெயகலா கிருபாகரன் மற்றும் ஆங்கிலத்தில் சுந்தரலிங்கம் சோமையா ஆகியோர் வழங்கினர்.


நிறைவாக இராப்போசனம் வழங்கப்பட்டு, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.




























No comments:

Post a Comment

Post Bottom Ad