தமிழீழத் தாயக விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு, தமிழர் தேசமாக இணைந்து நின்று ஒருங்கிணைந்து செய்யப்பட்ட நிகழ்வாக 27-11-2025 அன்று நடைபெற்றது.
தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி உள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அனைவரையும் இணைக்கும் விதத்தில் நடைபெற்ற இம்மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்து மக்களும் வருகைதந்து மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர்.
கடந்த 27.11.2025 அன்று மாலை 6.05 மணிக்கு மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திற்கான மாவீரர்நாள் நிகழ்வுகள் Gosnells ஓவல் மைதானத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
மாலை 6 மணிக்கு அவுஸ்திரேலிய நாட்டின் சம்பிரதாயப்படி பழங்குடி, நூங்க இன மக்கள் தலைவர் Tina Haydenஇன் நாட்டுக்கான வரவேற்போடு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
மேற்கு அவுஸ்திரேலிய நேரம் மாலை 6.05 மணிக்கு மணியொலியுடன் ஆரம்பித்த நிகழ்வில் பொதுச்சுடரை கலாநிதி நாகமுத்து தணிகாசலம்பிள்ளை அவர்களும் ஒய்வு பெற்ற ஆசிரியர் சண்முகநாதன் ராமலிங்கம் அவர்களும் ஏற்றினர்.
அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் கொடியை நூங்க இன சமூக தலைவராகிய Tina Haydenஉம் அவுஸ்திரேலிய தேசிய கொடியை சமூக ஆர்வலரும் தமிழீழ மக்களின் நண்பரும் ஆகிய Karry Fisher உம் தமிழீழத் தேசிய கொடியை திரு அருள்ராஜ் அழகையாவும் ஏற்றி வைத்தனர்.
ஈகை சுடரை திரு ஜோசப் சுதாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
நிகழ்வுகளை செல்விகள் ஜெயனி ஜெயகஜன் மற்றும் பாரதி கிருபாகரன் ஆகியோர் தொகுத்து வழங்க, நினைவுரை திரு நிமலாகரன் அவர்கள் வழங்க சத்தியப்பிரமாணத்தை திரு சாந்தரூபன் முன்னெடுக்க நிகழ்வுகள் இரவு 8 மணியளவில் நிறைவடைந்தது.


























No comments:
Post a Comment