
கடந்த ஞாயிற்றுக்கிழமை 24-05-2026 அன்று சாகாத சான்று நாவல்களின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. தேசத்திற்கான காலக்கடமையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து நின்ற ஆ.ந.தீ அவர்களின் விடுதலைப் பணியாகக் காலத்தின் பதிவுகளாக மூன்று நூல்கள் 15-12-2024 அன்று வெளியிடப்பட்ட நிலையில், அந்நூல்களில் ஒன்றான சாகாத சான்று என்ற இரு நாவல்களில் தொகுப்பு One Nation One Heart - One Heart One Nation என்ற பெயரில் Austin Macauley Publishers ஆல் 22-05-2026 அன்று ஆங்கிலப் பதிப்பாக சர்வதேச ரீதியாக இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு கிறவீன் உயர்தரப் பள்ளியில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி 5 மணி வரை அரங்கம் நிறைந்த நிகழ்வாக நிறைவுடன் நடைபெற்றது. பொதுச்சுடர்களை இளையோர்கள் பதின்மர் ஏற்றிவைக்க ஆரம்பமான இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, மூத்த செயற்பாட்டாளர் திரு. சஞ்சயன் அவர்களின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
இந்நூலின் மொழிபெயர்ப்பை ஆக்கிய சட்டத்தரணி திரு. எடில்பேர்ட் நவீனன் ராஜதுரை அவர்கள் சார்பில் அவரது உரையை திரு. ஜனகன் சிவராம் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நூலுக்கான ஆய்வுரையை இளம் செயற்பாட்டாளர் சட்டத்தரணி செல்வி. ரேணுகா இன்பகுமார் அவர்களும் தொழிலாளர் கட்சி உறுப்பினர், சமூகச் செயற்பாட்டாளர், சட்டத்தரணி திருமதி. துர்க்கா ஓவன் அவர்களும் வழங்கினர்.
தொடர்ந்து விருந்தினர் உரைகளை மதிப்பிற்குரிய Mark Robert, Buttigieg Member of the Legislative Council, Parliamentary Secretary for Minister for Industrial Relations, Parliamentary Secretary Minister for Work Health and Safety, and Parliamentary Secretary for Minister for Multiculturalism அவர்களும் திரு. சுஜன் செல்வன் (Councillor Sujan Selvan, Cumberland Council) அவர்களும் திரு. இம்மானுவேல் செல்வராஜ் (Councillor Immanuel Selvaraj, Hills Council) வழங்கினர்.
நிறைவாக நூலாசிரியர் ஏற்புரையை திரு. ஆ.ந.தீ அவர்கள் வழங்கினார். நன்றியுரையை அவரது மகன் செல்வன் இசைக்கோ தீபவர்ணன் அவர்கள் வழங்கினார்.


















































































No comments:
Post a Comment