மெல்பேர்ணில் நடைபெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான புகழ்வணக்கநிகழ்வு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 23 May 2026

மெல்பேர்ணில் நடைபெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான புகழ்வணக்கநிகழ்வு



கடந்த 28-04-2026 அன்று இயற்கைச்சாவடைந்த தாயக எழுச்சிப்பாடல்கள் பலவற்றின் குரலுக்கு சொந்தக்காரரும் தமிழீழத் தேசியத்தலைவரின் நன்மதிப்பைப்பெற்றவருமாகிய பாசறைப்பாணர் கலைமாமணி தேனிசை செல்லப்பா அவர்களுக்கான புகழ்வணக்க நிகழ்வு 22-05-2026 வெள்ளிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவில்  மெல்பேர்ண் மாநகரில்  உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


மெல்பேர்ண் மாநகரத்தில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற நகரமான டன்டினோங் நகரத்தில் அமையப்பெற்றுள்ள கற்பகதரு மண்டபத்தில் மாலை 6.30 மணியளவில் இளையசெயற்பாட்டாளர் செல்வி. அபிதாரணி சந்திரன் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகியது.


பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. திலகராஜன் அழகரட்ணம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து தமிழ்மக்களும் தேனிசை செல்லப்பா அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள். 


அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது.


தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை திரு. யாதவன் சிவராசா மற்றும் திரு. திலகராஜன் அழகரட்ணம் ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களிருவரும் தங்களது உரைகளில் "1998_ம் ஆண்டு காலப்பகுதியில் தேனிசை செல்லப்பா அவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு மேலற்கொண்ட சுற்றுப்பயணம் தொடர்பாகவும் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் நடைபெற்ற தேனிசை செல்லப்பா அவர்களது இசைநிகழ்வு தொடர்பாகவும், அவ் இசைநிகழ்வுகளில் மக்கள் தாங்களாகவே முன்வந்து  தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளைக் கழற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக  செல்லப்பா அவர்களது கைகளில் அன்பளிப்புச் செய்த சம்பவங்களையும் நினைவுகூர்ந்து" தமது நினைவுரைகளை நிகழ்த்தினார்கள்.


அடுத்து தேனிசை செல்லப்பா அவர்களால் பாடப்பட்டு இசைத்தட்டுக்களில் வெளிவந்த தாயகப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து தாயகப் பாடல்கள் கரோக்கி பின்னணி இசையில் உள்ளூர்ப் பாடகர்களான திரு. டொமினிக் சந்தியாபிள்ளை, திரு.பார்த்தீபன் கணேசமூர்த்தி மற்றும் திரு. றதீஸ்காந்த் பரமானந்தம் ஆகியோகளால் உணர்வுபூர்வமாக பாடப்பட்டது.


இறுதியாக 1998ம் ஆண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற தேனிசை செல்லப்பா அவர்களது இசைநிகழ்வின் காணொளித் தொகுப்பிலிருந்து சிறுபகுதி அகலத்திரையில் திரையிடப்பட்டதுடன் இரவு 8.00 மணியளவில் பாசறைப்பாணர் கலைமாமணி தேனிசை செல்லப்பா அவர்களுக்கான புகழ்வணக்கநிகழ்வு நிறைவுபெற்றது.









































































No comments:

Post a Comment

Post Bottom Ad