தேனிசை செல்லப்பா - இறுதி வணக்க நிகழ்வு - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 2 May 2026

தேனிசை செல்லப்பா - இறுதி வணக்க நிகழ்வு


தமிழீழ விடுதலைக்காக தனது பாடலால் பலம் சேர்த்த உன்னத பாடகர் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு 02-05-2026 சனிக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.


தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு. மனோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈகச்சுடரினை இளைய பாடகி செல்வி. கிசோமி சிவநேசன் அவர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, நிகழ்விற்கு வருகைதந்தோர் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து, பாடகர் சிவகாந் சிவப்பிரகாசம் அவர்களும் பாடகர் கமலநாதன் அய்யா அவர்களும் தேனிசை செல்லப்பா அவர்களின் பாடல்களை பாடினர். 


பிரபல வானொலி அறிவிப்பாளர் திரு. கானா பிரபா அவர்களும் பிரபல இசைக்கலைஞர் சாரு ராம் அவர்களும் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகளை பதிவு செய்தனர்.


அவசரமாக ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு தேனிசை செல்லப்பா அவர்களுக்கான இறுதி வணக்கத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.














































No comments:

Post a Comment

Post Bottom Ad