பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கப்பிள்ளையார் ஆலயமுன்றலில் 19.03.1988 முதல் 19.04.1988 வரையான முப்பதுநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 38வது ஆண்டு நிறைவுநாளும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் நினைவுநாளும் அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மெல்பேர்ண் நகரிலுள்ள Heidelberg எனும் புறநகரப்பகுதியில் அமையப்பெற்றுள்ள சென் ஜோண்ஸ் தேவாலய மண்டபத்தில் 19.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 6.15 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் தலைமையில் நடைபெற்ற அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மூத்த செயற்பாட்டாளர் திரு. றவிகிருஸ்ணா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. றகு கீருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மாமனிதர் எலியேசர் அவர்களது மகள் திருமதி தமயந்தி காராளபிள்ளை அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுதியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு அவரவர் குடும்பத்தவர்கள், உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர்களால் ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து நினைவுரையை மூத்த செயற்பாட்டாளர் திரு. றவிகிருஸ்ணா அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மாமனிதர்களான ஜெயக்குமார், எலியேசர் ஆகியோர்களது தொடக்ககால செயற்பாடுகள் மற்றும் தமிழ் தேசியப்பற்றாளர்களான சோமசுந்தரம் மற்றும் சபேசன் ஆகியோர்கள் அவுஸ்திரேலியாவில் தமிழுக்கும் தமிழீழ வீடுதலைப்போராட்டத்திற்கும் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் மிகவும் விலாவாரியாக விளக்கி தனது நினைவுரையை நிகழ்த்தியிருந்தார்.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாலை 7.15 மணியளவில் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் நினைவுநாள் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment