எட்டுப் பெருநகரங்களில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் - May 18 2023 AUNZ - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 10 May 2023

எட்டுப் பெருநகரங்களில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் - May 18 2023 AUNZ


இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 13 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம். இலங்கைத்தீவின் அதிகாரம் சிறிலங்கா பேரினவாத அரசின் கைகளிற்கு பிரித்தானியரால் கையளிக்கப்பட்ட நாள் முதல் தமிழ்பேசும் மக்கள் மீதான இனவழிப்பு தொடர்ந்துவருகின்றது.


இனவழிப்பின் உச்சமாக, ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம். கொடிய போர் முடிவடைந்து 14ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


சிறிலங்காவின் பொருளாதாரம் சிதைவடைந்து மிகவும் நெருக்கடியான காலத்தை எதிர்கொண்டிருக்கின்ற நிலையிலும், அப்பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்காக எனினும் தமிழ்பேசும் மக்களின் நீதி்க்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தற்போதைய சிறிலங்கா அரச தரப்போ அல்லது எதிர்தரப்போ இன்னமும் சிந்திக்காத நிலையே நிதர்சனமாக இருக்கின்றது. தமிழர் தேசத்தின் தொன்மைகளை சிங்கள தேசத்தின் அடையாளங்களாக சித்தரித்து கையகப்படுத்தும் நிலையை இன்னும் விரைவுபடுத்துகின்ற நிலை தொடர்கின்றது.


எனினும் தமிழர் தரப்பு கோரிக்கைகளை உறுதியாக முன்வைத்து, தொடர்ச்சியாக தமிழர் இனவழிப்பு தொடர்பான கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களை தாயகதமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் தொடர்ச்சியாக நடத்திவருகின்றார்கள்.


இந்நிலையில், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் இவ்வாண்டும் மே 18 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் ஏழு பெருநகரங்களிலும் நியுசிலாந்தின் ஒக்லண்ட் பெருநகரத்திலும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளன.


இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


Tamil Genocide Remembrance Day 

To commemorate is the first step to resistance. In face of 14 years of ongoing structural Tamil genocide, the commemoration of the peak of Tamil genocide orchestrated on the shores of Mullivaikkal in May 2009 remain crucial for not only Eelam Tamils but also those across humanity - as witnesses of the worst instance of genocide of the 21st century. 

Join us as in the 14th commemoration of Tamil genocide to pay respects to all those who were systematically killed through Tamil genocide and resolve to carry the legacy of Tamil resistance and self-determination forward - for the liberation of our people.


அடெலயிட்:

நிகழ்விடம்: Rossini Function Centre, 49 Gorge Rd, Paradise SA 5075

நேரம்: 06.30pm - 8pm

தொடர்பு: 0405 711 184, 0469 059 281, 0470 310 350


பிரிஷ்பன்:

நிகழ்விடம்: 3 St Paul's Drive Woodridge QLD 4114

நேரம்: 06.30pm

தொடர்பு: 0424 075 175


கான்பரா:

நிகழ்விடம்: Hughes Community Centre, 2 Wisdom St, Hughes ACT 2605

நேரம்: 6.30pm

தொடர்பு: 0413 926 360


மெல்பேர்ண்:

நிகழ்விடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152

நேரம்: 7pm - 8.30pm

தொடர்பு: 0433 002 619, 0452 205 399


பேர்த்: 

நிகழ்விடம்: Kelmscott Hall, 60 River Rd, Kelmscott WA 6111

நேரம்: 6.30pm

தொடர்பு: 0469 601 466, 0470 169 692


சிட்னி:

நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW 2145

நேரம்: 06.30pm

தொடர்பு: 0470 274 539


தாஸ்மானியா:

நிகழ்விடம்: 35 Redwood Road, Kingston TAS 7050

நேரம்: 6.45pm - 7.45pm

தொடர்பு: 0406 655 571


ஒக்லாண்ட்

நிகழ்விடம்: Fickling Convention Centre, 546 Mount Albert Road, Three Kings, Auckland 1042

நேரம்: 6.30pm
No comments:

Post a Comment

Post Bottom Ad