தமிழீழத் தேசிய மாவீரர் நாள் - தெற்கு ஆஸ்திரேலியா - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 28 November 2023

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் - தெற்கு ஆஸ்திரேலியா - 2023



தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு 27/11/2023 அன்று மாலை 5.40 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்வை திரு.பிரதீபன் பஞ்சாட்சரம் மற்றும் செல்வி.சங்கீத வாமுதேவன் தொகுத்து வழங்கினர். 


நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடரினை இலங்கை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மற்றும் அடிலெய்டு தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் ஆகியோர் ஏற்றிவைத்து நிகழ்வு ஆரம்பமானது. ஆஸ்திரேலியா தேசியக்கொடியை வூட்வில் நகரசபை உறுப்பினர் திரு. செந்தில் சிதம்பரநாதன் அவர்கள்  ஏற்றிவைத்தார். 


அதனைத் தொடர்ந்து பழங்குடியினர் கொடியினை புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கான வழக்கறிஞர் திருமதி.கேத்தரின் ரஸ்ஸல், (Mrs. Catherine Russell, Advocate for Asylum Seekers and Refugees)அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு.தர்மலிங்கம் கஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். 


தொடர்ந்து 06.05 இற்கு திரு. கந்தையா பரம்சோதி அவர்களால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. சமநேரத்தில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் மற்றும்

பொதுமக்கள் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து மேடைநிகழ்வுகளாக நடனம், கவிதை, பேச்சு மற்றும் தமிழர்களின் கலையான பறை சிலம்பாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. 


இறுதியாக, நம்புங்கள் தமிழீழம் என ஆரம்பிக்கும் உறுதிமொழி பாடலுடன் மேடை நிகழ்வுகள் நிறைவுபெற்றன. தொடர்ந்து  கொடிகள்  இறக்கப்பட்டு இராப்போசனத்துடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவுபெற்றன.











































No comments:

Post a Comment

Post Bottom Ad