சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2023 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday 28 November 2023

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2023


தமிழீழ மக்களிற்கு சுதந்திரமான கௌரவமான வாழ்வை ஏற்படுத்துவதற்காக, ஓரு கட்டமைக்கப்பட்ட விடுதலை இயக்கமாக, உயரிய இலட்சிய பயணத்தில், தமது குறிக்கோளை எந்த சமரசத்திற்கும் இடமின்றி, இறுதிவரை உறுதியுடன் போராடிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு திங்கட்கிழமை 27-11-2023 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.


பொதுச்சுடரினை இளைய செயற்பாட்டாளர் ராகுல் விஸ்வரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார். இவரது தந்தையாரின் தங்கை மாவீரர் மேஜர் சித்திரா, இவரது தாயின் சகோதரி மாவீரர் லெப்ரினன்ற் தமிழவள் உட்பட இறுதிப் போரில் மேலும் இரு போராளிகளை இழந்த பின்னணியை கொண்டவர் ராகுல் விஸ்வரூபன் ஆவார். தமிழ்ச்செயற்பாட்டாளரும் லேபர் கட்சியின் செயற்பாட்டாளருமான துர்க்கா ஓவன் அவர்கள் அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை லெப்ரினன்ற் கேணல் எழிற்கண்ணன் அவர்களுடைய மகள் கதிரினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் பாலகுமார் பாலகிருஸ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரினை, லெப்ரினன்ற் தாவீதன் என்றழைக்கப்படும் சபாநாயகம் சுபாஸ்கரன் அவர்களின் தம்பி ரம்சி அவர்கள் முதன்மை ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர்களும் மற்றும் உரித்துடையோர்களும் 260 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களை தாங்கிய மாதிரி கல்லறைகளுக்கு ஏற்றிவைத்தனர். முதன்மை ஈகைச்சுடரினை ஏற்றிய ரம்சி அவர்கள், தனது தாய், தந்தை, சகோதரி ஒருவரையும் முள்ளிவாய்க்கால் வலைஞர்மடத்தில் 24-04-2009 சிறிலங்கா அரசின் விமானத் தாக்குதலின்போது இழந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. 


அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட அனைவரும் உணர்வு மயமாக மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.


தொடர்ந்து, மாவீரர் நாளிற்கான உறுதிமொழியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பணியகப்பொறுப்பாளர் ஜனா சிவராமலிங்கம் அவர்கள் வாசிக்க, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அதனை மீள உரத்துச்சொல்லி உறுதிமொழி மேற்கொண்டார்கள்.


தொடர்ந்து, மலர்வணக்க நிகழ்வு நிறைவடையும் வேளையில், "விண்வரும் மேகங்கள் பாடும்" என்ற தாயகப்பாடலை பாடகர் தேவா அவர்கள் பாடினார். அதனைத் தொடர்ந்து, "மேகம் வந்து கீழிறங்கி ..." என்ற பாடலை பாடகர் ஜெய்கரன் அவர்கள் பாடினார். அவர்களோடு "வானம் ஒன்றே வாழ்வென கூறி.." என்ற பாடலை சின்னக்குரலால் கிருஸ்திகா செல்வராசா பாடினார்.


தொடர்ந்து, நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Anthony D’Adams (member of the Legislative Council in the NSW parliament) அவர்களும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் செனற்றர் MS Lee Rhiannon (the former Australian Senator) அவர்களும் கலந்துகொண்டு சிறு உரையாற்றினார்கள்.


தொடர்ந்து, தமிழீழ தாயகத்தில் பாடல்வரிகளை எழுதி, அங்கேயே இசையமைத்து சில பாடல்களையும், தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை இணைத்து இன்னும் சில பாடல்களையும் கோர்வையாக்கி, தியாகத் திருவொளிகள் - 2 என்ற பாடற்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது. மேஜர் டயஸ் அவர்களின் அண்ணனும் மூத்த செயற்பாட்டாளருமான தனபாலசிங்கம் அவர்கள் தியாகத் திருவொளிகள் - 2 என்ற பாடற்தொகுப்பை வெளியிட்டு வைக்க, திரு.முத்தரசு கோச்சடை, திரு. புவநேந்திரன் சுதர்சன், திருமதி.சோனா பிறின்ஸ், திரு. ஜெயதீபன், திரு. சுந்தரகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


தொடர்ந்து சிறார்கள் இளையோர்கள் பெரியவர்கள் இணைந்து நடனநிகழ்வை வழங்கினர். மாவீரர் தியாகத்தையும் மக்கள் எழுச்சியையும் வெளிப்படுத்துவதாக நடனநிகழ்வும் தமிழ்க்கலைகள் வெளிப்பாடு மூலம் மாவீரர் வணக்கமும் செலுத்தப்பட்டது சிறப்பாக அமைந்திருந்தது.


இந்நடன நிகழ்வில் கலாநிதி யசோதரபாரதி சிங்கராஜர் அவர்களின் நெறியாள்கையில்:

வைஷ்ணவிப்பிரியா சிவகுமார்

தாரணிப்பிரியா சிவகுமார்

திவாசினி சிவராசா

சஞ்சய் குரு

ரேமாம்ருதா கருணைவேந்தன்

துளசி யசிதரன்

ரியானா ஞானராஜா

ஜெய் குரு


கீதா மனோகரன் மற்றும் பைரவி மனோகரன் அவர்களின் நெறியாள்கையில்


அபிஷயா மதிவதன்

நிதுர்சி செல்வராசா

மோகிதா செல்வராசா

துஜானியா உதயசங்கர்

ரிசான் உதயசங்கர்

தமிழ்நிலா சிவராம்

தமிழ்திவ்யா சிவராம்

அகர்வின் திருச்செல்வம்

அஷ்மித்தா திருச்செல்வம்

கபிசன் நரேஸ்குமார்

சனோசன் செல்வகுமார்

லக்ஷாரா செல்வகுமார்

ஆதிரா அசோக்குமார்

அபிரா அசோக்குமார்

பிரகதி சுனந்தன்

சாமந்தி சிவரூபன்

மாயா யாதவன்

யாரா யாதவன்

டஷ்வின் சிவராசா

அக்சயா கீதன்

பார்த்தீபன் செல்வகணேசன்


ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


இவர்களுடன் நிதிவாணன், மிருணாளினி, தமக்க்ஷணா ஆகியோர் தமிழ்க்களரி கலைவடிவத்தை வழங்கியிருந்தனர்.


நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வை உணர்வுபூர்வமாக நினைவுகூருவதற்கும், தாயகத்தில் இந்த ஆண்டு கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான பங்களிப்பை வழங்குவதற்குமான நிதி ஆதரவை வழங்கிய சிட்னி வாழ் தமிழ் வர்த்தகர்கள், முல்லைஓசை அமைப்பினர், கிழக்கின் விருட்சம் அமைப்பினர், வல்வை நலன்புரிச்சங்கம், ஈழத்தமிழ்ச் சங்கம், மற்றும் பல தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டும், பல நாட்களாக மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளில் தங்களை பங்களித்து நின்றும், மாவீரர் நாளில் தங்கள் முழுப்பங்களிப்பையும் வழங்கி நின்றும், நிகழ்வு நிறைவடைந்த பின்னரும் அனைத்து துப்பரவு பணிகளிலும் பங்களிக்க காத்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து, உறுதியேற்றலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.


இந்நிகழ்வை திருமதி. நிதர்சினி செல்வகுமார், திரு. யாழவன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர். 


இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்  3000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

   


No comments:

Post a Comment

Post Bottom Ad