தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னெடுப்பில் தாயகத்தில் செயல்படுத்தப்படும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் மாவீரர் பெற்றோர் பராமரிப்பிற்கும் உதவும் நோக்கில் நிழலாடும் நிஜங்கள் என்ற நாட்டிய நடன நிகழ்வு சிறப்பான முறையில் 02-08-2025 சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நடன நிகழ்வு Joan Sutherland Performing Arts Centre இல் மாலை 6 மணிக்கு அகவணக்கத்தோடு ஆரம்பித்து, 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நினைவு வணக்கமும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தாயகத்தில் நடைபெற்றுவரும் கல்வித்திட்டம் மற்றும் மாவீரர் பெற்றோர் பராமரிப்பு பற்றிய விபரங்கள் அனைவருக்கும் காட்சிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நிழலாடும் நிஜங்கள் “சிதைந்த நிலத்தில் சலங்கை ஒலி" என்ற நாட்டிய நடன நிகழ்வு அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment