தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நினைவாக இளையோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசத்தின் குரல்கள் என்ற நிகழ்வு சிறப்பான முறையில் 14-12-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்நிகழ்வை பரணிதா பாஸ்கரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
மாலை 6 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நினைவான பாடலை காந்தன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, எதிர்காலச்சந்ததி தமிழர் அடையாளம் தமிழர் கலை தமிழர் பண்பாடு என்பவற்றை முன்கொண்டுசெல்லுமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இப்பட்டிமன்றத்தில்
பிரவீணா பிரதீபராஜன்
சியக்சா நகுலேஸ்வரன்
தினுசா குவேந்திரன்
ஆகியோர் ஒரு அணியிலும்
பிருத்திகா பிரதீபராஜன்
றேமாம்ருதா கருணைவேந்தன்
லவனிகா குவேந்திரன்
ஆகியோர் மற்றைய அணியிலும் கலந்துகொண்டு சிந்தனைக்குரிய பல கருத்துக்களை சுவாரசியமாக பகிர்ந்துகொண்டனர்.
இதில் நடுவராக மூத்த செயற்பாட்டாளர் சஞ்சயன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
தொடர்ந்து, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எதிர்பார்ப்பு தொடர்பில் மூத்த செயற்பாட்டாளர் ரஜீவன் அவர்கள் சிறிய கருத்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களைப் பற்றிய விளக்கப் பகிர்வை (presentation) இளையோர்களான புகழோவியன் காந்தரூபன் மற்றும் இசைக்கோ தீபவர்ணன் ஆகியோர் வழங்கினர்.
பார்வையாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டதோடு நிகழ்வு நிறைவடைந்தது.
நிறைவாக, சிட்னி தமிழர் மத்தியில் முன்னுதாரணமாக செயற்பட்டுவரும் மூத்தவர்களில் ஒருவரான ருத்திரா ஐயா அவர்கள் இளையோர்களால் மதிப்பளிக்கப்பட்டார்.
































No comments:
Post a Comment